வருகின்ற 4 டிசம்பர் 2021 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது.  இது முழு சூரிய கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது. இது அண்டார்டிகாவில் தெரியவரும்.  மேலும் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் இதன் ஒரு பாதி தெரியவரும். எனினும் இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்ட்டிக்காவில் தெரியவரும்.இதுவே இந்த ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம், அடுத்த முழு சூரிய கிரகணம் 2023ம் ஆண்டில் மட்டுமே தெரியவரும். இதற்கு முன்பு 2017ல் மட்டுமே முழு சூரிய கிரகணம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றாலும் நாசாவின் ஆர்தோகிராபிக் மேப் மூலம் சூரியன் நகர்வதைக் காணலாம்.


2017ல் தெரிந்த முழு சூரிய கிரகணம்: 






சூரிய கிரகணம் எப்போது நிகழும்?







பூமி சூரியனை எவ்வாறு வட்டப்பாதையில் சுற்றுவதைப்போல், சந்திரன் பூமியை வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் பூமி, சந்திரன், நிலவு ஒரே பாதையில் நேராக இருக்கும் போது சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும். இதில் பூமிக்கும், சூரியனுகுக்கும் நடுவே நிலவு வரும் போது சூரிய ஒளி வெளிச்சத்தை நிலவு பூமிக்கு வரவிடாமல் சற்று தடுக்கும். அப்போது ஏற்படுவதே சூரிய கிரகணம்.