வரவேற்பைப் பெற்ற ‘சென்னை ஒன்று' செயலி
சென்னையில் பொதுப் போக்குவரத்துப் பயணத்தை எளிமையாக்கும் Chennai One செயலிக்கு அமோக வரவேற்பு. 24 மணி நேரத்தில் சுமார் 1.3 லட்சம் பேர் பதிவிறக்கம். இச்செயலியில், முதல் நாளில் மட்டும் 4,394 பயணச் சீட்டுகள் வாங்கப்பட்டுள்ளன; இதில் 53% பயணச் சீட்டுகள் மாநகரப் பேருந்துக்கானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தொழில் முதலீடுகள்
தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில், ரூ.1,156 கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது திண்பண்டங்கள், மசாலா, எண்ணெய் வகை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை 60 ஏக்கரில் அமைகிறது. இதன் மூலம் உள்ளூரைச் சேர்ந்த 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,
ஒவைசி தனித்து போட்டி
பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் முடிவு. இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து RJD பதில் தராததால் இம்முடிவு எனத் தகவல். 2020ம் ஆண்டு 25 இடங்களில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
தங்கம் விலை குறைவு:
சென்னையில் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2800 அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ரூ.320 குறைந்துள்ளது, சவரன் 84,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் இதயத்தை காணவில்லை
பாலி தீவில் உயிரிழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் சடலம் அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சடலத்தில் இதயத்தைக் காணவில்லை எனப் புகார். 23 வயதான ஹாட்டோவ் என்பவர் பாலி தீவில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக விசாரணை.
மேட்டூர் அணை நீர்மட்டம்:
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 9425 கன அடியாக உள்ளது அணையின் நீர் மட்டம் 119.19 அடியாகவும் நீர் இருப்பு 92.185 டி.எம்.சி. ஆகவும் உள்ளது அணையில் இருந்து மொத்தமாக 6500 கன அடிக்கு நீர் வெளியேற்றம்
ED விசாரணை
ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்து டெல்லியில் உள்ள ED தலைமை அலுவலகத்தில் யுவராஜ் சிங்கிடம் 7 மணி நேரம் விசாரணைஇதே வழக்கு தொடர்பாக இதற்கு முன்பு ரெய்னா, தவான் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று தொடங்கும் நிலையில், பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருப்பதால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் காத்திருப்பு இன்றி நேரடியாக அனுமதி. நேற்று மட்டும் 63,837 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ரூ.2.85 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
வந்தே பாரத் பெட்டிகள் அதிகரிப்பு
நெல்லையில் இருந்து சென்னைக்கு 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கம் 8 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இச்சேவையானது, கடந்த ஜனவரியில் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப்-காக தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் அதிபர்!
அமெரிக்காவின் நியூயார்க்கில் அதிபர் ட்ரம்பின் கான்வாய்க்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தடுத்து நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி.அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், தனது காரில் இருந்து இறங்கி உடனே ட்ரம்பை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். பிறகு அரை மணி | நேரம் நடந்தே தூதரக அலுவலகத்திற்கு சென்றார்.