இலங்கையில் ராணுவ ஆட்சி அமைப்பத்து சாத்தியம் இல்லை என பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்ன கூறியுள்ளார்.


இலங்கையில் இராணுவ ஆட்சியை அமைப்பது சாத்தியமில்லாதது.இராணுவ ஆட்சியை உருவாக்கும் நோக்கம் இல்லை. ஆகவே, இலங்கையில் இராணுவ ஆட்சி உருவாகும் என யாரும் அச்சப்பட  வேண்டாம் என்று கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்ன பேசியதாவது.

இலங்கையில் போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள்,  கொள்ளை சம்பவங்கள் காரணமாகவும் அதை தடுக்கவும், அவசரகால நிலைமையின் கீழ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இலங்கையில் ராணுவ ஆட்சி அமைக்கும் எண்னம் இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லை. இது குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.  இராணுவ ஆட்சியை உருவாக்குவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போதைய இராணுவத் தளபதிக்கு  இல்லை.நாட்டில் வன்முறைகள் இடம்பெறும்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் பணியாற்றி வருகிறார்கள். நான் பாதுகாப்பு செயலாளர் பதவியை எனக்கு வழங்குமாறு எந்த சந்தர்ப்பத்திலும் கோரவில்லை. எனினும் 35 ஆண்டுகள் சீருடையணிந்து நாட்டுக்காக சேவையாற்றிய எனக்கும், மீண்டும் அவ்வாறானதொரு சேவையை ஆற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும் போது அதனை தட்டிக்கழிக்க முடியாது. பதவியை ஏற்பது தகுதியற்ற செயலாகவும் ஆகாது.


அத்தோடு முன்னாள் பிரதமரின் பதவி விலகலுடன் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, அரசியலமைப்பிற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நான் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்நான் பாதுகாப்பு செயலாளர் பதவியை எனக்கு வழங்குமாறு எந்த சந்தர்ப்பத்திலும் கோரவில்லை.


எனினும் 35 ஆண்டுகள் சீருடையணிந்து நாட்டுக்காக சேவையாற்றிய எனக்கும் , மீண்டும் அவ்வாறானதொரு சேவையை ஆற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும் போது அதனை தட்டிக்கழிக்க முடியாது. பதவியை ஏற்பது தகுதியற்ற செயலாகவும் ஆகாது.அத்தோடு முன்னாள் பிரதமரின் பதவி விலகலுடன் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு,அரசியலமைப்பிற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நான் மீண்டும் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

நாட்டின் எதிர்காலத்துக்கு உதவியவர்கள் வீதிகளில் இரத்துடன் கிடப்பதும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் கவலையளிக்கிறது. மேலும் பலர் தாக்கப்பட்டு இரத்தம் வடிந்ததைக் காணும்போது பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை விட பல மடங்கு வன்மமான நிலைமையை உணர்ந்தேன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிசிடிவி  வீடியோக் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்துவோம். இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியபோது, அதைக் கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.135 வீடுகள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டன. அரசு பொலிஸ் வாகனங்கள் உள்ளிட்ட 61 வாகனங்களுக்கு பகுதியளவில் சேதமும், 45 வாகனங்கள் முற்றாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர் அடுத்த 48 மணித்தியாலங்கள் இலங்கை லிபியாவாக மாறியிருந்தது. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. 


போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறைகள் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே அவசரகால நிலைமையின் கீழான மற்றும் ஊரடங்கு சட்டத்தின் கீழான முழுமையான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு சிலர் வன்முறையை கையில் எடுத்து நாட்டை நாசமாக்குவதையும், பாதுகாப்பு படைகள் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலர் முன்னெடுப்பதையும் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவேதான் 48 மணிநேரம் பொறுமையாக யோசித்து, நிலமை கட்டுக்குள் இல்லையென்றால் துப்பாகிச் சூடு நடத்த முடிவெடுத்தோம்” இவ்வாறு அவர் கூறினார்.