Telephone Auction: லட்சக்கணக்கானோரின் உயிரை பறித்த டெலிபோன் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் போக காரணம் அது. அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்பது மட்டுமே ஆகும்.


வரலாற்றுச் சுவடுகள்:


இருண்ட மற்றும் வேதனையான நினைவுகளை விட்டுச் செல்லும் சில விஷயங்கள் வரலாற்றில் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், காலம் கடந்த பிறகு வரலாற்றுச் சின்னங்களாக அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அத்தகைய ஒரு விஷயம் தான் இந்த தொலைபேசி. இந்த தொலைபேசி சாதாரணமான பொருள் அல்ல, அதன் பின்புலத்தில் மிகவும் வேதனையான நினைவுகள் மறைந்திருந்தன. ஏனெனில், உண்மையில் இது ஹிட்லரின் தொலைபேசி. இது ஒரு வரலாற்று விஷயம் மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்கும் காரணமாக இருந்தது. இந்த சூழலில் தான் ஹிட்லர் பயன்படுத்திய,  இந்த தொலைபேசி கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் தற்போதைய இந்திய மதிப்பில் ரூ .2,03,27,712 கோடிக்கு ஒருவர் வாங்கினார். இந்த போனின் பின்னால் என்னென்ன வேதனையான கதைகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.



லட்சக்கணக்கான உயிர்களை குடித்த தொலைபேசி:


நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் தொடர்புடைய ஒவ்வொரு உத்தரவையும் ஹிட்லரின் தொலைபேசி நினைவூட்டுவதாக இருந்தது. ஹிட்லர் தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் பயன்படுத்திய இந்த தொலைபேசியை தான், போரின் போது அவர் தனது முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தினார். ஹிட்லரும் அவரது நாஜிக் கட்சியும் லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற, இரண்டாம் உலகப் போரின் காலத்தைச் சொல்லும் வரலாற்று அத்தியாயத்தின் ஒரு பகுதியாக இந்த தொலைபேசி இருந்தது.


ஹிட்லர் இந்த ஃபோனில் இருந்து போர் உத்திகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், யூதர்கள், போலந்து குடிமக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அவர் இனப்படுகொலை செய்து கொண்டிருந்த காலத்திற்கு இது தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்காக இருந்தது. இந்த தொலைபேசி நாஜி அதிகாரிகளுடன் போர் திட்டங்கள் பற்றி மட்டுமின்றி, பெரிய குற்றங்கள் குறித்தும் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டது. இதனால்தான் இந்த போன் 'மரணத்தின் போன்' என்று அழைக்கப்பட்டது.


ரூ.2 கோடிக்கு விலை போனது ஏன்?


ஹிட்லரின் தொலைபேசி ஒரு அடையாளமாக மட்டுமல்ல, பலருக்கு வரலாற்றில் ஒரு பயங்கரமான சகாப்தத்தை நினைவூட்டுகிறது. இந்த போன் பல வெறுப்பு மற்றும் கொலைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், மோசமான வராலாற்றின் ஒரு அடையாளமாகவே பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.


ஹிட்லர் தொலைபேசியின் தனித்துவம்:


சிவப்பு நிறத்திலான ஹிட்லரின் தொலைபேசி,  ரோட்டரி-டயல் சீமென்ஸை கொண்டுள்ளது.  அதில் ஹிட்லரின் பெயர்  மற்றும் ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது 1945 இல் ஹிட்லரின் பெர்லின் பதுங்கு குழியில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ஜெர்மனி சரணடைந்த பின்னர் சோவியத் வீரர்களால் பிரிட்டிஷ் அதிகாரி சர் ரால்ப் ரெய்னருக்கு வழங்கப்பட்டது. ஏல நிறுவனம் இந்த தொலைபேசியை "ஹிட்லரின் பேரழிவிற்கான மொபைல் சாதனம்" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இது "எல்லா காலத்திலும் மிகவும் அழிவுகரமான 'ஆயுதம்' என்றும் தெரிவித்துள்ளது.