உலக மக்கள் பசியை போக்க எலன் மஸ்க் பங்குகளை விற்று சுமார் 6 பில்லியன் டாலர்களை WFP-க்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார். WFP அதன் கணக்கை எவ்வாறு செய்கிறது என்பதை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்திருந்தார். WFP இயக்குனர் டேவிட் பீஸ்லி, இது குறித்து விவாதத்திற்கு மஸ்க்கை அழைத்திருந்தார். எலன் மஸ்க் அதன் நிறுவனங்களை தவிர்த்து பிற கருத்துகளை வழங்குவதில் வல்லவர். அதுபோல எலன் மஸ்க் ஐக்கிய நாடுகள் சபைக்கு அதுபோன்ற சவாலை முன்வைத்திருந்தார். எலன் மஸ்க் தெரிவித்த கருத்துகள் ஆனது அவரது நிறுவனங்கள் குறித்தோ அல்லது கிரிப்டோ கரன்சி குறித்தோ அல்ல. இது சமூகம் சார்ந்தது ஆகும். உலகளாவிய பசி குறித்த தீவிரமான விஷயம் என்பதாகும்.

Continues below advertisement

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (டபிள்யூஎஃப்பி) இயக்குனர் டேவிட் பீஸ்லி, "மஸ்க் அல்லது ஒரு பில்லியனர்களின் 3 சதவீத செல்வத்தை செலுத்தினால் உலகளாவிய பசியை தீர்க்க முடியும்" என கூறியிருந்தார். இதையடுத்து ஐநா சரியான உத்தியை கொண்டு வந்தால், தனது பணத்தை கொடுக்க மஸ்க் ஒப்புக் கொண்டார். உலகின் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு தீர்க்கும் என்பதை WFP வெளிப்படையாக விவரிக்க முடிந்தால், தற்போதே டெஸ்லா பங்குகளை விற்று அதை செய்வேன் என இணை நிறுவனரின் டுவிட்டருக்கு மஸ்க் பதிலளித்திருந்தார். அது திறந்த மூல கணக்கியலாக இருக்க வேண்டும் எனவும் எப்படி பணம் செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் துல்லியமாக பார்க்கவும் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Continues below advertisement

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், மொத்தம் 200 பில்லியனுக்கும் அதிகமான பணமதிப்பை கொண்டிருக்கிறார். பீஸ்லி கூற்றுப்படி, "இந்த செல்வத்தில் 3 சதவீதம் சுமார் 6 பில்லியன் டாலர் இருக்க வேண்டும். 42 மில்லியன் மக்களுக்கு உதவும், நாம் அவர்களை கவனிக்கவில்லை என்றால் இறந்துவிடுவார்கள். இதை கொடுப்பது மில்லியனர்களுக்கு சிக்கலானது அல்ல" என்று கூறிய பீஸ்லி அந்த டுவிட்டர் பதிவில் முழுமையான முறையான விளக்கத்தை அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பீஸ்லி தெரிவிக்கையில், 6 பில்லியன் டாலர் உலகப் பசியை தீர்க்கும் என்று தாங்கள் ஒருபோதும் கூறவில்லை. இது முன்னோடியில்லாத பசிப்பட்டினியின் நெருக்கடியை 42 மில்லியன் உயிர்களை காப்பாற்ற ஒருமுறை நன்கொடையாகும் என குறிப்பிட்டதாக கூறினார். இந்த சவால் ஆனது முற்றுப்புள்ளி பெறாமல் இருந்து வந்தது. தற்போது WFP அது குறித்து முன்மொழிந்துள்ளது, "மில்லியனர்களின் ஒரு முறை முறையீடு" என்ற தலைப்பில், உலகின் பணக்காரர்களால் நன்கொடையாக அளிக்கும் பணம் பசியைத் தடுக்க எப்படி செலவிடப்படலாம் என்பதை விவரிக்கிறது. உணவு மற்றும் அதன் விநியோகத்திற்காக $3.5 பில்லியன் மற்றும் பிற செலவினங்களுக்கிடையில் ரொக்கம் மற்றும் உணவு வவுச்சர்களுக்கு $2 பில்லியன் என்று இந்த விளக்கம் உள்ளடக்கியுள்ளது.