கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
17 ஆயிரம் பேர் உயிரிழப்பா?
இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) என்ற மருத்து மருத்துவர்களின் பரிந்ததுரையின்பேரில் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்காத அந்த நேரத்தில், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த மருந்து பயன்படத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வை நடத்தினர். கொரோனா முதல் அலையின்போது மார்ச் முதல் ஜூலை 2020 வரை பல உலக நாடுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த மருந்தால் 17,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா , துருக்கி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில், அமெரிக்காவில் அதிகபட்சமாக 12,739 பேர் இந்த மருந்து எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஸ்பெயினில் 1,895, இத்தாலியில் 1,822 பேரும், பெல்ஜியத்தில் 240 பேரும், பிரான்ஸில் 199 பேரும், துருக்கியில் 95 பேரும் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மார்ச் முதல் ஜூலை 2020ஆண்டுக்கு இடையில் ஆறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் 17 ஆயிரம் உயிரிழந்திருக்கின்றனர். மற்று நாடுகளையும் எடுத்துக் கொண்டால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகழ்ந்து பேசிய டிரம்ப்:
இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து குறித்து அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார். "ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். இது மேஜிக் செய்யும் அதிசய மருந்தும் என்றும் கூறியிருந்தார்.
முடக்கு வாதம் மற்றும் லூபஸை குணப்படுத்த பயன்படுத்தும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளும் பயன்படுத்தலாம்" என்று கூறியிருந்தார்.மேலும், சில ஆய்வாளர்கள் மேஜிக் புல்லட் என்றும் கூறினார்கள். இதற்கு உணவு மற்றும் மருந்த நிர்வாகம் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது.
இருப்பினும், ஜுன் 2020ல், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எந்த பலனும் அளிக்கவில்லை என்று பல ஆய்வுகளில் தெரியவந்தது. மேலும், இறப்பு விகிதமும் அதிகரித்ததால் உணவு மட்டும் மருந்து நிர்வாகமும் மருந்தின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.