உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில், பனிமலையில் மோதி விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 1,500 பேர் உயிரிழந்தனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 3,800 மீட்டர்  ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.


இதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்க்க ஆர்வத்துடன் வருவார்கள். Ocean Gate Expedition  என்ற நிறுவனம் தனது நீர்மூழ்கி கப்பல் மூலம் சுற்றுலா பயணிகளை அப்பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி சுற்றுலா பயணிகளை கடந்த ஞாயிறு அன்று, டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட அழைத்துச் சென்றது. ஆனால் அந்த நீர்மூழ்கி கப்பல் கிளம்பிய சுமார் இரண்டு மணி நேரத்தில் மாயமானது. சரியாக ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் நீர்மூழ்கி கப்பல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க கடலோர காவல் படை மற்றும் ரோந்து படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்மூழ்கி கப்பலில் அவசர காலத்தில் 90 மணி நேரம் வரை பயணிகளுக்கு 90 மணி நேரம் உயிர்வாழ தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்படும். திங்கள்கிழமை இரவு நிலவரப்படி 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாகவும், இன்று காலை நிலவரப்படி அது 30 மணி நேரமாக குறைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டை முடிக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் டூர் ஆபரேட்டர் நிறுவன அதிகாரி ஒருவர் என மொத்தம் 5 பேர் உள்ளனர். சிக்கியுள்ள பயணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் டைட்டானிக் கப்பல் சிதைவடைந்து இருப்பதால், அங்கு சென்றடைய சுமார் 8 மணி நேரமாகும். ஆனால் நீர்முழ்கி கப்பல் எந்த இடத்தில் காணாமல் போனது என்பது தெரியாத காரணத்தால் தேடுதல் பணி சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளனர். 


இதனால் கடற்படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக கூறுகையில், தேடுதல் பணியின் போது பயங்கர சத்தம் கேட்டதாகவும், அது நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்திற்கு 30 நிமிட இடைவெளியில் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.