தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நேற்று உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கான மருந்துகள் உட்பட 74 மருந்துகளின் சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது.


தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) பிப்ரவரி 21, 2023 அன்று நடைபெற்ற 109வது அதிகார சபைக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில், மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2013 இன் கீழ் விலைகளை நிர்ணயித்துள்ளது. மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் அறிவிப்பின் மூலம் டபாக்லிஃப்ளோசின் சிட்டாக்ளிப்டின் மற்றும் மெட்ஃபோர்மின் ஹைட்ரோகுளோரைடு (Dapagliflozin Sitagliptin and Metformin Hydrochloride) ஒரு மாத்திரையின் விலையை ரூ.27.75 என நிர்ணயித்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் டெல்மிசார்டன் மற்றும் பிசோப்ரோலால் ஃபுமரேட் (Telmisartan and Bisoprolol Fumarate) மாத்திரைகள் ஒன்றின் விலை 10.92 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கால்-கை வலிப்பு மற்றும் நியூட்ரோபீனியா சிகிச்சை உட்பட 80 திட்டமிடப்பட்ட மருந்துகளின் (NLEM 2022) உச்சவரம்பு விலையையும் திருத்தியுள்ளதாக NPPA தெரிவித்துள்ளது. சோடியம் வால்ப்ரோயேட்டின் (Sodium Valproate) ஒரு மாத்திரையின் (200மி.கி) உச்சவரம்பு விலை ரூ.3.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், ஃபில்கிராஸ்டிம் ஊசி (ஒரு குப்பி) (Filgrastim) உச்சவரம்பு விலை ரூ.1,034.51 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்டிசோன் (20 மி.கி.), (Hydrocortisone) ஸ்டீராய்டு மாத்திரை ஒன்றின் விலை ரூ.13.28 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, பிப்ரவரி 21 தேதி நடைபெற்ற 109வது ஆணையக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் மருந்துகள் (விலைகள் கட்டுப்பாடு) ஆணை, 2013 (NLEM 2022) இன் கீழ் 80 திட்டமிடப்பட்ட மருந்துகளின் உச்சவரம்பு விலையையும் NPPA திருத்தியுள்ளது.