அமெரிக்காவில் டெக்ஸா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு மாஸ்க் அணிந்து சென்ற தம்பதியினரை வெளியே போகச்சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவரின் முகநூல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடியது. குறிப்பாக முதல் அலையில் மிகப்பெரிய பாதிப்பினை அமெரிக்கா சந்தித்து வந்த நிலையில் முக கவசம் இல்லாமல் யாரும் வெளியே வரவேக்கூடாது என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இங்கு மட்டுமில்லை உலகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயப்பட்ட நிலையில், இதனைப்பின்பற்றவில்லை என அபராதங்கள் எல்லாம் மக்களுக்கு விதிக்கப்பட்டது. இதோடு பொது இடங்களுக்கு செல்லும் போது,  மாஸ்க் அணியாதவர்களை வெளியே போகச்சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் சில நாள்களுக்கு மு்ன்னதாக நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





அப்படி என்ன நடந்தது தெரியுமா? மாஸ்க் அணிந்து டெக்ஸாஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் இருவரை அந்நிர்வாகம் வெளியே போகச்சொல்லிவிட்டது. ஆனால் அந்த அமெரிக்க தம்பதியினரோ, மாஸ்க் அணிவது குற்றமா? ஏன் எங்களை வெளியே போகச்சொல்கிறோம் என்று கேள்விகளை எழுப்பியப்போதும் அதை எதையுமே உணவக மேலாளர்கள் கண்டுக்கொள்ளவில்லையாம். தனியார் நடத்தும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்றாற்ப் போல் விதிகளை அமைத்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளதாக தெரிவித்துவிட்டார்களாம். இதனையடுத்து அந்த உணவகத்தை விட்டு வெளியேறிய தம்பதியினர் இந்த அனுபவம் குறித்து முகநூலில் கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 



அந்த முகநூல் பதிவில்,“ நானும் என்னுடைய கணவரும் உணவகத்திற்கு சென்ற போது மோசமான நிகழ்வு ஒன்று நடந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர் பெண் ஒருவர், இங்கு மாஸ்க் அணிபவர்களுக்கு இடம் இல்லை எனவும், கழட்டி வைத்துவிட்டு உள்ளே வாருங்கள் என கூறினார். ஆனால் எங்களுடைய 4 மாதக்குழந்தைக்கு உடலில் சிலப்பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அக்குழந்தையை பாதுகாப்பதற்கே நாங்கள் மாஸ்க் அணிந்துள்ளோம் என்று கூறியும், தனியார் உணவக நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.  இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர்கள் மூடத்தனத்துடன் இச்செயல் அரங்கேறி இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். இதோடு நாங்கள் அங்கிருந்து வந்துவிட்டதாகவும் அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த விதிமுறைக் குறித்த எந்தவித எச்சரிக்கை பலகைகளையும் வைக்கவில்லை எனவும் அந்த இடத்திற்குள் நுழையும் போது மட்டுமே அவர்களுக்கு  இதுப்போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.