தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் கலப்பாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 7 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 70 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 60 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வானம் மேகமூட்டமாகவும் ஒரு சில இடங்களில் மழைபொழிந்தும் காணப்பட்டது.
மேலும் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 54.00 சென்டி மீட்டர், கலசப்பாக்கம் 159.00 அளவுக்கு விடிய, விடிய கொட்டி தீர்த்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவும் 33.58 மில்லி மீட்டர் மழைபெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் சராசரியின் அளவு 33.08 சென்டிமீட்டர் மழை இடி மின்னலுடனும் பலத்த காற்றுடன் பொழிந்தது
இந்த மழையால் திருவண்ணாமலை நகரின் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் கழிவுநீர் வெளியேறி சாலைக்கு வந்தது. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசியது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. திருவண்ணாமலை அடுத்த நொச்சுமலை, திண்டிவனம் பைபாஸ் சாலை, மற்றும் கிருஷ்ணவேணி நகர் உள்ளிட பகுதியில் வீடுகள் மழை நீரில் சூழ்ந்துள்ளது அதுமட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வீட்டின் உள்ளே இருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் இந்த பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில் பொதுமக்களுக்கு எந்தவொரு சிரமம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவேண்டும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.