Hindu Values: ”இந்து மத விழுமியங்களால்தான் உலகில் அமைதி மேம்படும்” - தாய்லாந்து பிரதமர் பேச்சு

Hindu Values: இந்து மத விழுமியங்களால் தான் உலகில் அமைதி நிலைநாட்டப்படும் என, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பேசியுள்ளார்.

Continues below advertisement

Hindu Values: உலகில் இந்துக்களின்  அடையாளத்தை முற்போக்கான மற்றும் திறமையான  சமூகமாக நிறுவும் நோக்கில், மூன்றாவது உலக இந்து மாநாடு தாய்லாந்தில் நேற்று தொடங்கியது.

Continues below advertisement

உலக இந்து மாநாடு:

உலகில் இந்துக்களின் அடையாளத்தை முற்போக்கான மற்றும் திறமையான சமூகமாக நிறுவும் நோக்கத்துடன், மூன்றாம் உலக இந்து மாநாடு  தாய்லாந்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. 'தர்மத்தின் வெற்றி' என்ற பிரகடனத்துடன், பிரபல துறவியான மாதா அமிர்தானந்தமயி, பாரத சேவாஷ்ரம சங்கத்தின் சுவாமி பூர்ணாத்மானந்த், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் சர்சங்சாலக் மோகன்ராவ் பகவத், சர்கார்யவா தத்தாத்ரேய ஹோசபாலே, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் ஸ்வாமி, பராசித் அமைப்பின் பொதுச் செயலர் மிலிந்த் ஸ்வாமி பரிஷத் விக்யானந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.  3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வி, பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, மேம்பாடு, ஊடகம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த, உலகின் 61 நாடுகளை சேர்ந்த 2200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 65 நாடுகளைச் சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களும் அடங்குவர். 

தாய்லாந்து பிரதமர் உரை:

அந்நாட்டின் பிரதமர் ஸ்ரேத்தா தவிஸ்,  மாநாட்டின் முக்கிய அமர்வில் பங்கேற்கவிருந்த நிலையில், தனிப்பட்ட சில காரணங்களால் அவரால் வரமுடியவில்லை. இதனால், கூட்டத்தில் தாய்லாந்து பிரதமரின் செய்தி வாசிக்கப்பட்டது. அதில், இந்து மதத்தின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களின் ( மதிப்புகளால் ) அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக இந்து மாநாட்டை தாய்லாந்து நடத்துவது பெருமையாக உள்ளது. அமைதியான சகவாழ்வுக்கான தொகுப்பு மற்றும் சமநிலையின் முக்கிய கொள்கைகளை வேதங்கள் காட்சிப்படுத்துகின்றன. சாந்தி என்ற கருத்து இந்த கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்துமத விழுமியங்கள் அமைதியயை வலியுறுத்துகிறது. கொந்தளிப்பாக உள்ள உலகம் இந்து மத விழுமியங்களான அகிம்சை, உண்மை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். இந்து மத விழுமியங்களால் ( மதிப்புகளால் ) தான் உலகில் அமைதி நிலைநாட்டப்படும்” என தாய்லாந்து பிரதமரின் உரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மோகன் பகவத் பேச்சு:

மாநாட்டில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் ஒருவரையொருவர் அணுகுவதுடன்,  உலகத்துடன் ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, “ இந்துக்கள் உலகில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பார்கள். இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதால், உலகத்துடன் இணைக்கும் செயல்முறையும் தொடங்கியுள்ளது” என தெரிவித்தார். முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு டெல்லியிலும், 2018ம் ஆண்டு சிகாகோவிலும் உலக இந்துக்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. அதைதொடர்ந்து, தற்போது மூன்றாவது மாநாடு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த  10 லட்சம் பேர், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement