ரஷ்யாவில் உரியம் என்ற கிராமத்தில் ஓடக்கூடிய ஆற்றின் குறுக்கே மரத்தினால் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தினைத் துணிச்சலாக கடக்க முயன்ற லாரி விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு ரஷ்யாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்கள் பெரும் அவதிப்பட்டுவருகின்றனர். இப்பகுதிகள் உள்ள ஆறுகளில் அனைத்தும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய ஆற்றில் வெள்ளம் தரைப்புரண்டு ஓடும் நேரத்தில், ஆற்றின் குறுக்கே மரத்தினால் கட்டப்பட்டுள்ள தொங்குபாலத்தினை லாரி டிரைவர் ஒருவர் கடக்க முயற்சித்த காட்சிகள் காண்போரை பதபதைக்க வைத்தது






 ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து சுமார் 4500 கிமீ தொலைவில் அமைந்துள்ளது உரியம் கிராம். இந்த கிராமத்தின் நடுவே உள்ள ஆற்றினைக்கடக்க வேண்டும் என்றால் மக்கள், மரத்தினால் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தினைத்தான் பயன்படுத்த வேண்டும். இதுத்தவிர அவர்களுக்கு எளிமையாகச் செல்வதற்கு வேறு வழியில்லை. ஆனால் எப்பொழுது மழைப்பொழிவு ஏற்பட்டாலும் தொங்கு பாலம் உடைந்துவிடும் நிலை ஏற்படும். குறிப்பாக தொங்கு பாலம் என்றாலே அனைவருக்கும் அதனைக் கடந்து செல்வதற்கு பயமாகத்தான் இருக்கும். அதுவும் ஆற்றின் குறுக்கே இருக்கும் பொழுது சொல்லவா வேண்டும். ஆனால் இதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமலும், ஆற்றினுள் வெள்ளப்பபெருக்கினை ஏற்பட்டதைக்கூட கவனத்தில் கொள்ளாத லாரி டிரைவர் ஒருவர் உரியம் கிராமத்தில் உள்ள  மரத்தினால் ஆன தொங்குபாலத்தினை கடக்க முயற்சித்துள்ளார். லாரி பாலத்தின் நடுவே சென்றதும் ஆற்றினுள் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலம் உடைந்து லாரி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த காட்சிகள் சினிமாவினை மிஞ்சும் அளவிற்கு இருந்தமையால் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.


 






மேலும் ஆற்றின் அடித்துச்செல்லப்பட்ட லாரி டிரைவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டார். ஆனால் லாரி முற்றிலும் தண்ணீர் மூழ்கிப்போனது. இதோடு தொங்குபாலம் உடைந்தமையால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆற்றினைக்கடப்பதற்கு வழியில்லாமல் தவித்துவருகின்றனர்.  அண்மையில் பெய்த கனமழையால், உரியம் கிராமத்தில் உள்ள மர தொங்குபாலம் மட்டுமில்லாமல், வெள்ளப் பெருக்கின் காரணமாக டிரான்ஸ் – சைபீரிய ரயில்வே பாலமும் சேதமடைந்தது.  இதோடு ரஷ்யா – சீன மற்றும் மங்கோலிய எல்லைகளுக்கு வடக்கே சுமார் 190 கிமீ தொலைவில் உள்ள ஜபைகல்ஸ்கல் பாலம் சேதமடைந்துவிட்டது. ஆனால் இதுவரை எந்தவித உயிரிழப்புகளும் இதன் காரணமாக ஏற்படவில்லை. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 650 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, 5 தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்து மக்களின் இயல்வு வாழ்க்கையினைப் பாதித்துள்ளது.