Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return to Earth: விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வருகிறார்? நேரலையில் அவர்கள் தரையிறங்குவதை எப்படி பார்ப்பது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளியில் சிக்கிக் கொண்ட அவர்களை தற்போது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் பூமிக்கு அழைத்து வருகிறது. இதனால், பூமியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Just In




எத்தனை மணிக்கு பூமிக்கு திரும்புகிறார்கள்?
விண்வெளியில் இருந்து 17 மணி நேர பயணத்திற்கு பிறகு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.27 மணிக்கு பூமிக்குத் திரும்புகின்றனர். இதற்கான முழு ஏற்பாட்டையும் நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ்-ம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் தரையிறங்கும் நேரத்தில் இருக்கும் தட்பவெப்ப நிலையும் தொடர்ந்து விண்வெளி ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேரலையில் பார்க்க முடியுமா?
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதை நேரலையில் பார்க்க முடியும். நாசா டிவி, நாசா ப்ளஸ், நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் தொலைக்காட்சியில் அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதை காண முடியும்.
பூமிக்குத் திரும்பியவுடன் என்ன நடக்கும்?
அமெரிக்காவில் தரையிறங்கும் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் உடனடியாக அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரத்தில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு அவர்களது உடல்நிலை சில நாட்களுக்கு கண்காணிக்கப்படும். ஏனென்றால், விண்வெளியில் 9 மாதங்கள் இருந்து அவர்கள் மீண்டும் பூமிக்கு வாழப் பழகுவதற்காக இங்கு சிகிச்சை, பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியும்.
க்ரூவ் ட்ராகன் மூலம் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 286 நாட்கள் விண்வெளியில் நாட்களை கழித்துள்ளனர். ஸ்டார்லைனர் நிறுவனத்தின் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற இவர்கள் இருவரும் அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியிலே சிக்கிக்கொண்ட நிலையில், ஸ்டார்லைனரின் போட்டி நிறுவனமான எலான் மஸ்க் இவர்கள் இருவரையும் காப்பாற்றி மீண்டும் பூமிக்கு அழைத்து வருகிறது.
இந்த சம்பவம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.