சம்மர் சால்ஸ்டைஸ்(Summer Solstice) நாளின் போது பூமியின் வடக்கு பகுதிகளில் இன்று பகலின் நேரம் இரவு நேரத்தைவிட அதிகமாக இருக்கும். இது பொதுவாக ஜூன் மாதத்தில் 20,21,22 ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வரும். இம்முறை ஜூன் 21ஆம் தேதியான இன்று சம்மர் சால்ஸ்டைஸ் வருகிறது. இந்தச் சூழலில் சம்மர் சால்ஸ்டைஸ் என்றால் என்ன? ஏன் இன்று இரவைவிட பகல் அதிகமாக இருக்கும்?


சால்ஸ்டைஸ் என்றால் என்ன?


பூமி சூரியனை எப்போதும் சுற்று வருவதை போல் பூமி தன்னை தானே மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பதிக்கு சுற்றும். இதன்காரணமாக தான் பூமியில் பகல் மற்றும் இரவு என்ற இரு மாறுபாடுகள் வருகின்றன. பூமி சரியாக வட்டமாக இருந்து தன்னை தானே சுற்றி வந்தால் அனைத்து இடங்களில் ஒரே மாதிரியாக பகல் மற்றும் இரவு இருக்கும். ஆனால் பூமி அப்படி சுற்றாமல் தன்னுடைய வட்டப்பாதையில் 23.5 டிகிரி (Earth's axis) சாய்ந்து தன்னைத்தானே மற்றும் சூரியனை சுற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் பகல் மற்றும் இரவு வருவது இல்லை. 




பூமி சூரியனை சுற்றும் போது வடக்கு பகுதியில் கடகரேகைக்கு(Tropic of Cancer) நேராக சூரியான வரும்போது சம்மர் சால்ஸ்டைஸ் நடக்கும். அதாவது பூமியின் வடக்கு பகுதியில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும். குறிப்பாக வடக்கு துருவத்தில் இன்று சூரியன் மறையாமல் இருக்கும். இதன் காரணமாக வடக்கு பகுதியில் பகலின் நேரம் வழக்கமான 12 மணி நேரத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.  இதேபோன்று டிசம்பர் மாதத்தில் சூரியன் சரியாக மகரரேகைக்கு(Tropic of Capricorn) நேராக அப்போது வின்டர் சால்ஸ்டைஸ்(Winter Solstice) நடக்கும். அந்த சமயத்தில் பூமியின் தென்பகுதியில் பகலின் நேரம் இரவைவிட அதிகமாக இருக்கும். வடக்கு பகுதியில்  சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் இதனால் அங்கு இரவு நேரம் அதிகமாக இருக்கும்.


சம்மர் சால்ஸ்டைஸ் அன்று பகல் நேரம் எவ்வளவு இருக்கும்?


சம்மர் சால்ஸ்டைஸ் அன்று பகல் நேரத்தின் அளவு இடத்திற்கு ஏற்ப மாறும். எனினும் வடக்கு பகுதியின் அனைத்து இடங்களிலும் பகல் நேரம் 12 மணிநேரத்திற்கு மேல் இருக்கும். இது அமெரிக்காவில் 15 மணிநேரம் வரை நீடிக்கும். அதேபோல் இந்தியாவில் 13 மணிநேரம் வரை இருக்கும். அதன்படி நியூயார்க் நகரில் இன்று பகல் நேரம் சரியாக 15 மணிநேரம் 5 நிமடங்கள் வரை நீடிக்கும். 




இந்தியாவில் டெல்லியில் இன்று சூரிய உதயம் காலை 5.23 மணிக்கு வந்து அஸ்தமனம் மாலை 7.21 மணிக்கு இருக்கும். அதாவது அங்கு இன்று பகலின் அளவு 13:58:01 ஆக இருக்கும். அதேபோல் பூமியின் பூமத்தியரேகைக்கு(Equator) அருகே உள்ள நகரமான சென்னையில் சூரிய உதயம் காலை 5.43 மணிக்கு வந்து அஸ்தமனம் மாலை 6.37 மணிக்கு இருக்கும். மொத்தமாக சென்னையில் இன்று பகலின் அளவு 12:53:48 வரை நீடிக்கும். 


மேலும் படிக்க: இனி டெலிவரி செய்பவர்களுக்கு பதிலாக ட்ரோன்கள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்..!