ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூடான். மேலும், பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்க கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடாகவும் உள்ளது. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர்.
சூடானின் நீண்ட கால பிரதமராக இருந்தவர் ஒமர் அல் பஷீர். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரித்தில் இருந்தார். முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். அவரது ஆட்சி உள்நாட்டு கிளர்ச்சிகளால் நிரம்பியது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக கடந்த 2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.
அதன் பின்னர் அவரது ஆட்சியின் மீது மக்களுக்கு சலிப்பும் வெறுப்பும் வந்தது. மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட கூடவே ராணுவமும் கைகோர்த்துக் கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீர் பதிவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
இடைக்கால அரசை அமைத்த அப்தல்லா ஹாம்டாக் அரசுக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவத்தினர் சூடானில் ஆட்சியை கைபற்றியது.
இப்படி ஒருபுறம் இருக்க சூடானில் யாராவது திருட்டு, விபச்சாரம், உள்ளிட்ட குற்றங்களை செய்தால் அவர்களுக்கு கை மற்றும் கால்கள் துண்டிப்பு, பொது இடங்களில் கல்லால் அடித்து மரணம் என்று கொடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
இந்தநிலையில், சூடான் நாட்டில் உள்ள ஒயிட் நைல் என்ற மாகாணத்தில் திருமணமாகி விவாகரத்து பெற்ற 20 வயது பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது அந்த பெண், இளைஞருக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, திருமணத்துக்கு பின்பு கணவர் அல்லாத மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறி இளம்பெண் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொடூர மரண தண்டனை:
இந்த வழக்கை விசாரித்த ஒயிட் நைல் மாநிலம் கோஸ்டி நகரில் உள்ள நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு பொது வெளியில் கல்லால் அடித்து கொலை செய்யும்படி மரண தண்டனை விதித்தது.
இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, வெள்ளை நைல் மாநில நீதிமன்றம்தண்டனை வாபஸ் பெறப்பட்டு வழக்கு மறுவிசாரணை செய்தது. விசாரணையில் அந்த பெண், ஆணுடன் நெருக்கமாக இருந்ததையும் முத்தமிட்டதையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து. இதனையடுத்து தலைமை நீதிபதி குற்றச்சாட்டை "விபச்சாரம்" என்பதிலிருந்து "ஆபாசமான செயலாக" மாற்றி அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தார்.
திருட்டு மற்றும் விபச்சாரம் உட்பட குர்ஆனில் அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்ட குற்றங்கள் செய்பவர்களுக்கு சூடான் சட்டத்தில் கசையடி, கை கால்களை வெட்டுதல், தூக்கிலிடுதல் மற்றும் கல்லெறிதல் போன்ற தண்டனைகளை விதிக்கின்றனர்.
சூடானில் பெரும்பாலான பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கல்லெறி தண்டனைகள் உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.