இந்த ஆண்டின் முழு நிலவு நாளை (14 ஜூன் 2022 ) தோன்றுகிறது. இதனை நாசா ஸ்டாராபெர்ரி மூன், ஹனி மூன் அல்லது மீட் மூன் என பெயர் வைத்து அழைக்கிறது. இது க்ரீன்விச் நேரப்படி இரவு சுமார் 11:52 மணிக்குத் தோன்றும்.


1930களில் மைனே ஃபார்மர்ஸ் அல்மனாக் என்ற அமைப்பு ஒவ்வொருஆண்டின் முழு நிலவுக்கான பூர்வீக அமெரிக்கப் பெயர்களை வெளியிடத் தொடங்கியது. இந்த பஞ்சாங்கத்தின் படி, இப்போது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள அல்கோன்குயின் பழங்குடியினர் இதை ஸ்ட்ராபெரி மூன் என்று அழைத்தனர். வடகிழக்கு அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரிகளை அறுவடை செய்வதற்கான காலநேரத்தில் இந்த நிலவு தோன்றுவதால் ஒப்பீட்டளவில் இந்த பெயர் வந்தது. இந்த முழு நிலவுக்கான பழைய ஐரோப்பிய பெயர் மீட் மூன் அல்லது ஹனி மூன் ஆகும். மீட் என்பது தண்ணீருடன் தேன் மற்றும் சில சமயங்களில் பழங்கள், மசாலாப் பொருட்கள், தானியங்கள் அல்லது ஹாப்ஸ் கலந்து புளிக்கவைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பானமாகும். சில நாடுகளில், மீட் ’தேன் ஒயின்’ என்றும் அழைக்கப்படுகிறது (மற்றவற்றில் தேன் ஒயின் வேறுபட்டது என்றாலும்). சில கலாச்சாரங்களில், ஜூன் மாத இறுதியில் தேன் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரம் என்பதால், இதை ஸ்வீட்டஸ்ட் என்றும் மாற்றி அழைக்கின்றனர்.






"ஹனிமூன்" என்ற வார்த்தை ஐரோப்பாவில் குறைந்தது 1500 களில் உருவானது. திருமணத்தின் முதல் மாதத்தை "தேனிலவு" என்று அழைக்கும் பாரம்பரியம் இந்த முழு நிலவுடன் இணைக்கப்படலாம், ஏனெனில் ஜூன் மாதத்தில் திருமணம் செய்யும் வழக்கம் ஐரோப்பியக் கலாச்சாரத்தில் உண்டு. இந்த முழு நிலவின் மற்றொரு ஐரோப்பிய பெயர் ரோஸ் மூன். "ரோஸ் மூன்" என்ற பெயர் ஆண்டின் இந்த நேரத்தில் பூக்கும் ரோஜாக்களிலிருந்து வந்ததாக சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. மற்றவர்கள் இந்த ஆண்டின் முழு நிலவின் நிறத்தில் இருந்து இந்த பெயர் வந்ததாகக் குறிப்பிடுகின்றனர்