இலங்கையில் இருந்து தப்பி தஞ்சம் அடைவதற்காக  அதிபர் கோட்டபய ராஜபக்ச மாலத்தீவை சென்று அடைந்தார் .இந்நிலையில் அங்கிருந்து வெளியேறுமாறு அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


 

அதிபர் கோட்டபயவை மாலத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவிலேயே இந்த எதிர்ப்பை அவர் பதிவிட்டு இருக்கிறார். 





மாலத்தீவில் கோட்டபயவுக்கு புகலிடம் வழங்கக்கூடாது என அவர் வலியுறுத்தி இருக்கிறார். அவருக்கு அகதி அந்தஸ்த்தும் வழங்கக்கூடாது என அவர் மாலத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலத்தீவு மக்களும் ஆதரவு தெரிவிப்பதாக  தனது ட்விட்டர் பதிவில் சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவை மாலத்தீவை விட்டு வெளியேற்றுமாறும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.





இன்று அதிகாலை மாலத்தீவுக்கு சென்ற இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிபர் கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

 

கோட்டபய ராஜபக்ச குடும்பத்தினர் பாதுகாப்பான முறையில் கார்களில் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ எடுத்துள்ள ஒரு நபர் ,இதற்கு எதிர்ப்பு  தெரிவித்திருப்பதை காண முடிகிறது.





 

மாலத்தீவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கோட்டபய தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாத  தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கை விமானப்படையினர் கோட்டபய ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்துச்சென்று  மாலத்தீவில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.