இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி 448 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263-க்கு விற்கப்படுகிறது. சர்க்கரை கிலோ ரூ.280 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.41 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. சிலிண்டரின் விலை 2,675 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விளிம்புநிலை மக்களுடன் நடுத்தரக் குடும்பத்தினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மணி நேர மின்வெட்டு :
தலைநகர் கொழும்பு உட்பட நாடே பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கிறது. கோடைக் காலத்தில் மின்சாரத்தின் தேவை உயரும் சூழலில், மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் 287 ரூபாயாகச் சரிந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துகொண்டே வரும் சூழலில் காரணமாக, போதிய காகிதங்களையும் அச்சிட மையையும் இறக்குமதி செய்து வாங்க முடியாத நிலையில், சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுதவிருந்த தேர்வுகளைக் காலவரையின்றி ஒத்திவைத்திருக்கிறது இலங்கை கல்வித்துறை.
மார்ச் 30ம் தேதி (இன்று) முதல் 10 மணிநேரம் மின்வெட்டு :
மார்ச் 30ம் தேதி (இன்று) முதல் மின்சார விநியோகத்தில் 10 மணிநேரம் தடை விதிக்குமாறு இலங்கை மின்சார வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தகவல் தெரிவித்துள்ளார்
மேலும், 750 மெகாவாட் வெப்பத் திறனுக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மின்வெட்டு காலத்தை 10 மணிநேரமாக அதிகரிக்கஇலங்கை மின்சார வாரியம் முயன்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பின்வரும் குழுக்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ளபடி 10 மணி நேரம் மின் தடை ஏற்படும்.
• பகுதிகள் A, B, C, D, E, மற்றும் F - மதியம் 2.00 மணி முதல் 12.00 மணி வரை பத்து மணி நேரம்
• பகுதிகள் ஜி, எச், ஐ, ஜே, கே, மற்றும் எல் - காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஆறு மணி நேரம் / மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நான்கு மணி நேரம்
• பகுதிகள் P, Q, R, மற்றும் S – மதியம் 2.00 மணி முதல் 12.00 மணி வரை பத்து மணி நேரம்
• பகுதிகள் T, U, V மற்றும் W - காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஆறு மணி நேரம் / மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நான்கு மணி நேரம்
• பகுதிகள் M, N, O, X, Y, மற்றும் Z (தொழில்துறை மண்டலங்கள்) - காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பத்து மணி நேரம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்