இலங்கையின் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு வரலாற்று மாற்றங்கள் ஏற்பட தொடங்கி இருப்பது உலக நாடுகளையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசியல் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறியது ,அதனை அடுத்து புதிதாக அதிபர் நியமனம் என வரலாற்று ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டன.


அதனை அடுத்து தற்போது இலங்கையின் பொருளாதாரத்தை, வர்த்தக துறையை கட்டி எழுப்பும் புலம்பெயர் அமைப்புகளின் உதவியை நாடிய இலங்கை அரசு.இலங்கைக்கு எதிரானவர்கள் என கருதி உலக நாடுகளில் வாழும் இலங்கை தமிழ் அமைப்புகளுக்கு மீண்டும் இலங்கைக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.இந்த தீர்மானத்தை இலங்கை அதிபர் நீக்கியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். ஆகவே புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் உதவியை இலங்கை அரசு நாடாக இருக்கிறது என்பதை பகிரங்கமாக செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது .இது பல ஆண்டுகளாக தமிழ் அமைப்புகளும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நடத்திய போராட்டத்தின் ஒரு வெற்றிப் படியாகவே இதை பார்க்க முடிகிறது.


தமிழ் மக்கள் விஷயங்களில், அயல்நாடு விஷயங்களில் முன் பாய்ந்து எதிர்மறையான கருத்துக்களை வெளியிடும் இலங்கையின் சிங்கள பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், சிங்கள தலைவர்களும் இன்று வாய்மூடி மௌனிகளாக இருப்பதை காண முடிகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய, புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்த்தே சில அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.


அத்துடன் புலம்பெயர் அமைப்புகள் ,நபர்கள் மீதான தடையை நீக்க இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்புரையிலும் அவர் தெரிவித்திருந்தார்.புலம்பெயர் தமிழர்களும் அவர்களது அமைப்புக்களும் தடை செய்யப்பட்டிருப்பதால், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளைப் பெற முடியாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் செயல்படும் இலங்கை தமிழர்களின் மற்ற புலம்பெயர் அமைப்புகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தடை நீக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த 6 சர்வதேச தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அத்துடன், 316 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


குறித்த புலம்பெயர் அமைப்புகள், தனி நபர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் 577 நபர்களும் 18 அமைப்புகளும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை,
 திராவிட ஈழ மக்கள் பேரவை, கனேடியத் தமிழர் பேரவை, ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இதேவேளை அடுத்த கட்டமாக மேலும் பல புலம்பெயர், புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் தடையை நீக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.ஆகவே இந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் என்பது ,எவ்வாறான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு விவரிக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக இலங்கை தமிழ் மக்களால் ,அந்நாட்டு அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போரின் போதுகாணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த தகவல்களை கேட்டு, அவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து ,தொடர்ந்து வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இலங்கையில் பல வருடக் கணக்காக தமிழ் மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. காணாமல் போன போனோரின் உறவினர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.


 இதுவரையிலும் இலங்கை அரசு அவர்களின் குரலுக்கு செவி சாய்த்ததாகவே தெரியவில்லை. அந்த மக்களின் கண்ணீர்ப் போராட்டத்திற்கு இலங்கையில் பதவிக்கு வந்த அரசியல் தலைவர்களும் நடவடிக்கை எடுத்தார்களா என்பதும் தெரியவில்லை.இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின், அமைப்புகளின் உதவியாக இலங்கை அரசு நாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.