இலங்கையில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரம் பள்ளிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்றிலிருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிகளை மூட உத்திரவிட்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இதற்கு முக்கிய காரணமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பள்ளிகளுக்கு வருவதற்கு தேவையான பெட்ரோல், டீசல் இல்லாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


பள்ளிகளில் பாடங்கள் அடுத்து வரும் வேலைநாட்களில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக இலங்கை நகர்புறத்தில் உள்ள சில பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து இலங்கையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “ கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அடுத்த வாரம் முழுவதும் செயல்பட வேண்டாம் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிக நேர மின் நிறுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கல்வித்துறை அமைச்சர் நிகல் ரணசிங்கே ( Nihal Ranasinghe) கூறுகையில், பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம். மேலும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்த வேண்டாம் என்பதற்கு Public Utilities Commission of Sri Lanka (PUCSL)-க்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.


இலங்கை சுதந்திரமடைந்த 1948-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இப்படிப்பட்ட ஒரு பொருளாதரா நெருக்கடியை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 9 பேர் இறந்து உள்ளனர். இந்நிலையில், அங்குருவாதோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக காத்திருந்த 63 வயது லாரி டிரைவர் உயிரிழந்தார். 


இதன் மூலம், பலி எண்ணிக்கை 10 ஆனது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 84 வயதுக்குட்பட்டவர்களும், அனைவரும் மாரடைப்பால் பலியானதும் தெரியவந்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண