Sri Lanka: இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், இனி பெட்ரோல் டீசல் வாங்க ஆன்லைன் பதிவு மற்றும் கியூஆர் கோடு ஸ்கேனிங் முறையினை  அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு பெட்ரோலியத்துறை. 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டில் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் மக்கள் வாழ்வதற்கே பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர். தொடர்ந்து நீடித்த பொருளாதார நெருக்கடியால் வேலையின்மை மற்றும் குறைந்த ஊதியம் என மக்கள் தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகினர். வாழ்வதற்கு வேறு வழியின்றி அனுமதியில்லாமல் அருகில் இருந்த நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக குடியேறினர். பொருளாதார்ஹ நெருக்கடிக்கு ஆளும் அரசுதான் முழுக்காரணம் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 


சமீபத்தில் இலங்கை பிரதமர் கோட்டபய ராஜபக்சேவின் அலுவலகத்தினை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் இலங்கையில் இருந்து மலேசியா தப்பியோடியுள்ளார் கோட்டபய ராஜபக்சே. ஆனால் எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருள் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வாரம் முதலே இலங்கை முழுவதும் எரிபொருள் இல்லாமல் பெரும் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டு வந்தது. மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகல் என தொடர்ந்து நின்றும் எரிபொருள் வாங்கமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு அனைவருக்கும் சரியாகப் போய்ச் சேரும் படி, ஆன்லைன் பெட்ரோல் பாஸ் மூலம் விநியோகிக்கப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் காஞ்சனா விஜிசேகரா தெரிவித்துள்ளார். 


இந்த ஆன்லைன் பாஸ் குறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்த ஆன்லைன் பாஸ் இலங்கையில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பாஸுக்கு என தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் கூறியுள்ளார். முதலில் fuelpass.gov.lk இந்த வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வண்டி எண் மற்ரும் அரசால் வழங்கப்பட்டுள்ள குடிமகனுக்கான ஆதரங்கள் மற்றும் பாஸ்போர்ட் எண்ணினைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.  பின்னர் வலைதளத்தில் காட்டும் கியூஆர் கோடினை ஸ்கீரீன்ஷாட் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் கியூஆர் கோடினை பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் பெட்ரோல் பங்கிற்கு செல்லும் போது கியூஆர் கோடினை காட்டி ஸ்கேன் செய்து எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம். இதனால் அனைவருக்கும் சரியான விகிதத்தில் எரிபொருள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண