ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக விமானி தெரிவித்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு இன்று திருப்பி விடப்பட்டது. இதை விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. விமானம் கராச்சியில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.


 






இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 6E-1406 கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு இருப்பது விமானிக்கு தெரிய வந்தது. தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, முன்னெச்சரிக்கையாக விமானம் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. 


ஹைதராபாத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது. இரண்டு வாரங்களில் கராச்சியில் தரையிறங்கும் இரண்டாவது இந்திய விமானம் இதுவாகும்.


இந்த மாத தொடக்கத்தில், டெல்லியில் இருந்து துபாய்க்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், இண்டிகேட்டர் லைட் செயலிழந்ததால், பாகிஸ்தான் நகரத்தில் திட்டமிடாமல் நிறுத்தப்பட்டது. 138 பயணிகள் பின்னர் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட மாற்று விமானத்தில் துபாய் புறப்பட்டனர்.


இந்த சம்பவம் குறித்து பேசிய ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங், பாகிஸ்தான் அரசிடம் இருந்து அனுமதி பெற விமான நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை விவரித்திருந்தார். அனுமதி வழங்குவதில் பாகிஸ்தான் அரசு அதிக கால அவகாசம் எடுத்தது. இதற்கு போதுமான கால அவகாசம் எடுத்து கொண்டது.


நாங்கள் உண்மையில் வருந்துகிறோம். ஆனால் அவர்கள் எங்களை விமானத்திலிருந்து லவுஞ்சிற்குள் பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதித்தனர். மாற்று விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஏனெனில் பாகிஸ்தானில் அனுமதி பெறுவதற்கு அதிக நேரம் எடுக்கும். குறிப்பாக இந்திய விமானங்களுக்கு வரும்போது அதிக நேரமாகும். 


நிச்சயமாக பாகிஸ்தானில் அனுமதி பெற உங்களது சிறந்த அதிகாரிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மிகவும் பதட்டமாக இருந்தது. நாங்கள் கவலைப்படுகிறோம்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண