இலங்கையில் காற்றாலை மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபகசவுக்கு மோடி அழுத்தம் கொடுத்தார் என சிலோன் மின்சார சபையின் தலைவர் கூறியிருந்த நிலையில், இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, அவர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.


காற்றாலை மின் திட்டத்தை அதானிக்கு நேரடியாக வழங்க மோடி அழுத்தம் கொடுத்தார் என கோத்தபய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக சிலோன் மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்ட் இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் வாக்குமூலம் அளித்த மூன்றே நாள்களில் அவர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.


இதனை ராஜபக்ச முற்றிலுமாக மறுத்த நிலையில், தான் சொன்ன கருத்தை பெர்டினாண்ட் திரும்பபெற்றார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதானி குழுமம், "இலங்கையில் முதலீடு செய்வதில் எங்களின் நோக்கமானது மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும். 


ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் என்ற முறையில், நமது இரு நாடுகளும் எப்போதும் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மையின் அவசியமான பகுதியாக இதைப் பார்க்கிறோம். வந்ததாகத் தோன்றும் மனச்சோர்வினால் நாங்கள் தெளிவாக ஏமாற்றமடைந்துள்ளோம். இப்பிரச்னைக்கு இலங்கை அரசு ஏற்கனவே தீர்வு கண்டுவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது. 


இந்நிலையில், இலங்கை மன்னார் மாவட்டத்தில் உள்ள 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க கோரி கடந்த 2021ஆம் ஆண்டு, நவம்பர் 25ஆம் தேதி இலங்கை நிதித்துறை அமைச்சருக்கு பெர்டினாண்ட் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "அதானியின் திட்டத்தை இந்தியா அரசின் திட்டமாக அங்கீகரிக்க இலங்கை பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இன்றைய அந்நிய நேரடி முதலீட்டு நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் இந்த முதலீட்டை நனவாக்க இரு நாட்டு தலைவர்களும் உடன்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


"இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டாளரின் முன்மொழிவு என்று இந்த திட்டத்தை நான் கருதுகிறேன். எனவே, மேல்குறிப்பிட்டபடி, இரு நாட்டு அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு முன்மொழிவு என தர்க்க ரீதியாக கருதலாம். இலங்கை முதலீட்டு வாரியம் மூலம் செயலாக்கப்பட்ட முதலீடாகும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னார் மற்றும் பூனேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்த 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் டிசம்பர் மாதம் பெற்றதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண