கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தனது டிவிட்டர் தளத்தில் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்றானது  சீனாவின் வூகான் மாகாணத்தில்  2019ம் ஆண்டு உருவாகி உலகம் முழுவதும் பரவியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் அனைத்து நிகழ்வுகளையும் சீரழித்தது.  கனடா போன்ற நாடுகள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியது. மேலும் கொரோனா காலகட்டத்தினை மிகவும் சிறப்பாக கையாண்ட உலகத்தலைவர்களில் ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் முக்கியமானவர்.  


ஆனால் அவருக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நிகழ்தன. இதையடுத்து அவர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ‘கொரோனாவுக்கு எதிராக அதிக தடுப்பூசி வழங்கிய நாடுகளில் ஒன்றாக கனடா உள்ளது. இருப்பினும் சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. அதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாகாண அரசுகள் இந்தக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள போதிலும், பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இவருக்கு ஏற்கனவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனை அடுத்து அதிலிருந்து மீண்டு வந்த அவர் தனது அரசுப் பணிகளையும் கொரோனா பரவல் தடுப்பு பணிகளையும் செய்து வந்தார்.






இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிட்ட அவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமை படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும் தன்னை தனிமை படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் தடுப்பூசி இன்னும் செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண