இலங்கையில் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் இதுவரை 23 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதன்படி கடந்த நான்காம் தேதி மட்டும் 3 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அவற்றில் இருவர் உயிரிழந்தனர்.


கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்ற போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.


வழக்குடன் தொடர்புடைய எதிர்தரப்பு, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த போதே துப்பாக்கியை பயன்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி சுடப்பட்டதாகவும், இந்த துப்பாக்கி சூட்டில்  எவருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.




அதனைத் தொடர்ந்தும், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பயன்படுத்திய சந்தேக நபருடன் மேலும் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு  தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 இதேவேளை, கொழும்பை அடுத்த லுனுகம்வெஹேர மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து வருடங்களில் ஆட்சியாளர்கள் செய்த அபிவிருத்திகளில் இதுவும் ஒன்று என கூறலாம்.


 இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தல். அதேபோல் போதைப் பொருள் மாபியாக்கள் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. இதில் அரசியல்வாதிகள் ,பெரும் வர்த்தகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையின் எதிர்காலமே இந்த போதை பொருள் கும்பலால் கேள்விக்குறியாகி இருப்பதை காண முடிகிறது .


 ஒரு புறம் அரசியல் ,பொருளாதாரம் பிரச்சனை என்றாலும் நாட்டில் என்றும் இல்லாதவாறு இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் கடந்த இரு மாதங்களில் அதிக அளவில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த பத்து வருடங்களுக்குள்ளாக நாட்டிற்குள் வர வைக்கப்பட்ட தேவையில்லாத ஒரு சமூகத்தை சீரழிக்கும் கலாச்சார சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது .


தற்போதும் கடல் வழியாக போதைப்பொருள் மூட்டைகளுடன் ஏராளமானோர் பிடிபடுவதையும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது .இலங்கையில் பொதுமக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் ஆட்சியாளர்களால் ,போதை பொருள் கடத்தல் மாஃபியாக்களையும், குற்றத்தில் ஈடுபடுபவோரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிகிறது.


 ஆனாலும் விசாரணைகளை  மேற்கொண்டுள்ள இலங்கை போலீசார் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு என்ன  காரணம் என்று விளக்கத்தையும் அவர்கள் தெளிவாக இதுவரை ஊடகங்களுக்கு வழங்கவில்லை. பொத்தம் பொதுவாக போதை பொருள் சம்பவங்கள் என்று மட்டுமே பதிவாகி இருக்கின்றன.


ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளைப் போல் தற்போது இலங்கையும் துப்பாக்கி கலாச்சாரம் என்ற ஒரு சீரழிக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. தற்போது முக்கியமாக எதற்கெடுத்தாலும்  துப்பாக்கி சூடு என என்ற நிலை இலங்கையில் வந்திருக்கிறது. அமெரிக்காவைப் போல இலங்கையிலும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் பள்ளி வளாகம், வணிக வளாகங்களில் திடீரென நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பலர் உயிரிழக்கின்றனர். அதே போல இலங்கையில் திடீரென துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இது சிறிது சிறிதாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு அழிவின் அடையாளமாகும். இது தற்போது இலங்கை பூராகவும் பரவி இருக்கிறது தமிழ் பிரதேசங்கள் ,சிங்கள பிரதேசங்கள் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இந்த துப்பாக்கி கலாச்சாரம் பரவி இருப்பதை நாம் அறிய முடிகிறது.


இதில் அதிகளவாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கூலிப்படையினரே இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ளார்கள் என இலங்கை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் மக்களை கட்டுப்படுத்த ஆட்சியாளர்களால், இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களையும், போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என  அண்மை காலங்களில் பதிவாகியுள்ள துப்பாக்கி சூடு சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இருந்த போதும் இந்த 23 உயிரிழப்புக்கள் நடந்த பிறகும் இலங்கையின் அரசியல் தரப்பில் இருந்தோ ,அதிகாரிகள் தரப்பிலிருந்தோ இதற்கான காரணங்கள், பின்னணியில் இருப்பவர்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியிபப்டவில்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண