உலகில் அதிக குற்றங்கள் நடைபெறும் நகரங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் 20 இடங்களில் ஐந்து ஆப்பிரிக்க நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் 11 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. 

இந்த பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும், குர்கான் 95வது இடத்தில் உள்ளது.
 

முதல் இடம் எந்த நகரத்திற்கு..? 

numbeo.com இணையதளம் வெளியிட்ட பட்டியலின்படி, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கராகஸ் உலகிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களில் முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான பிரிட்டோரியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நகரங்களே அதிக இடங்களை பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜோகன்னஸ்பர்க் நான்காவது இடத்தில் உள்ளது. போர்ட் எலிசபெத் எட்டாவது இடத்தையும், கேப் டவுன் 18வது இடத்தையும் பிடித்தது.

துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் தென்னாப்பிரிக்க சமூகத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருவதாகவும், வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கிகள் எளிதாகக் கிடைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது

அறிக்கையின்படி, 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் சுமார் 7700 கொலைகள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலான கொலைகள் கோபம் மற்றும் தவறான புரிதலில் காரணமாக நடந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், 430 கொலைகள் கும்பல் தாக்குதலாலும், மீதமுள்ள 7340 கொலைகளில், 1116 கொலைகள் வாக்குவாதம், தவறான புரிதலில் காரணமாக நடத்துள்ளதாக தென்னாப்பிரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெக்கி செலே தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை அதிக குற்றங்கள் நடக்கும் பட்டியலில் தலைநகர் முதலிடத்தில் உள்ளது. numbeo.com இணையதளம் வெளியிட்ட தகவலின்படி அதிக குற்றங்கள் நடக்கும் 11 நகரங்களில் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும், குர்கான் 95வது இடத்திலும் உள்ளன. 

தொடர்ந்து, பெங்களூரு 102வது இடத்திலும், இந்தூர் 136வது இடத்திலும், கொல்கத்தா 159வது இடத்திலும், மும்பை 169வது இடத்திலும், ஹைதராபாத் 174வது இடத்திலும், சண்டிகர் 177வது இடத்திலும், புனே 184வது இடத்திலும் உள்ளன.

தேசிய குற்றப்பதிவுப் பணியகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் உள்ள ஒரு அரசாங்க அமைப்பாகும். இது கடந்த 2023ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தது. 

தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 78.2 என்ற அங்கீகரிக்கப்பட்ட குற்ற விகிதத்துடன் (IPC) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 

இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள்
தரவரிசைகள் நகரம் ஐபிசி விகிதம்
1. கொல்கத்தா 78.2
2. சென்னை 178.5
3. கோயம்புத்தூர் 211.2
4. சூரத் 215.3
5. புனே 219.3
6. ஹைதராபாத் 266.7
7. பெங்களூரு 337.3
8. அகமதாபாத் 360.1
9. மும்பை 376.3
10. கோழிக்கோடு 397.5