கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் நீண்ட நாட்களாக குழந்தைகளும் பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். வீட்டில் அவர்களின் பெற்றோர்கள் வோர்க் ஃபிரம் ஹோம் செய்வதில் மூழ்கியுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் சில குழந்தைகள் தவித்து வருகின்றனர். அப்படி ஒரு குழந்தை தன்னுடைன் விளையாட யாரும் இல்லாததால் செல்லப் பிராணியான நாயுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது. 


இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அந்த சிறுமி நாயிடம் நாம் தற்போது ஹைடு அண்டு சீக் (கண்ணாமூச்சி) விளையாட உள்ளோம் என்று கூறுகிறார். அதை கேட்டவுடன் நாய் சுவற்றின் பக்கம் திரும்பி எண்ண தொடங்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு இந்தச் சிறுமியை தேட செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 






இந்த வீடியோவை தற்போது வரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 9ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஒருவர், "நாய்கள்தான் இந்த விளையாட்டில் நிச்சயம் வெற்றி பெறும். ஏனென்றால் நாய்கள் தன்னுடைய மோப்ப சக்தியை வைத்து எளிதாக கண்டுபிடிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.  மேலும் பலர் இது எவ்வளவு க்யூட்டாக உள்ளது என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 






ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களுடைய செல்ல பிராணிகளுடம் நேரத்தை செலவிடும் வகையில் பல வீடியோக்கள் வந்துள்ளன. அந்த வகையில் இதுவும் சிறப்பான வீடியோவாக அமைந்துள்ளது. கடந்த மாதம் ஒருவர் தன்னுடைய நாய்க்கு பெயிண்டிங் வரைய சொல்லி கொடுத்த வீடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:கோல்ப் மைதானத்தில் விளையாடிய குட்டிக் கரடிகள்; 2 லட்சம் பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரல்!