Slovakia PM Robert Fico Condition: ஸ்லோவாகியா நாடானது ஐரோப்பா கண்டத்தில் உள்ளது. ஸ்லோவாகியா நாட்டின் பிரதமராக ராபர்ட் ஃபிகோ பதவி வகித்து  வருகிறார். இவர், மீது நேற்று  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.


என்ன நடந்தது?


ஸ்லோவாகியா நாட்டின் பிரதமரான ராபர்ட் ஃபிகோ நேற்று தலைநகர் பிராடிஸ்லாவாவில் அரசு ரீதியான கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தை முடித்துவிட்டு திரும்புகையில், அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச் சூட்டில், அவர் காயம் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  சர்வதேச செய்திகள் தெரிவிப்பதாவது, சம்பவ இடத்தில் ஒரு நபர் பிரதமரை நோக்கி 5 முறை சுட்டார் என்றும் துப்பாக்கிச் சூட்டினால் பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.


அதிர்ச்சியளிக்கும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ துப்பாக்கிச் சூடு காட்சிகள்: இதில் பிரதமர் , பாதுகாப்பு அதிகாரிகளால் அவசரமாக காருக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்.






அரசு தகவல் என்ன?


பிரதமர் ஃபிகோ  உடல்நிலை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கலினாக் தெரிவித்ததாவது, பிரதமர் ஃபிகோவுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது.


சுட்டவர் யார்?


துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் யார் என்பது குறித்தான தகவல் வெளியாகவில்லை. ஆனால் அவரின் வயது சுமார் 70 இருக்கும் என்றும், அவர் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் என்றும் அதிகாரமற்ற தகவல் தெரிவிப்பதாக பிபிசி செய்தி தளம் தெரிவித்துள்ளது.


தலைவர்கள் கண்டனம்:


பிரதமர் ஃபிகோவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.




பிரதமர் மோடி தெரிவித்ததாவது, ”ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் நடந்த துப்பாக்கிச் சூடானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். அவர் உடனடியாக மீண்டும் நலம் பெற வேண்டுகிறேன். மேலும், ஸ்லோவாகியா நாட்டு மக்கள் பக்கம் இருக்கிறேன்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


பிரிட்டன் பிரதமர் ரிசி சுனக் தெரிவிக்கையில், ”இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.  இந்த பயங்கரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எண்ணங்கள் அனைத்தும் பிரதமர் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன” என  ரிசி சுனக் தெரிவித்துளார்.  பிரதமர் ஃபிகோவின் ரஷ்யா ஆதரவாளராக பார்க்கப்படுகிற போதிலும், யுக்ரைன் அதிபர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பயங்கர தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.




மேலும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.