ஐக்கிய அரபு அமீராகத்தின் அதிபர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் நேற்று மறைந்த நிலையில், இன்று புதிய அதிபராக அவரது சகோதரர் முகமது பின் சயத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சிற்பியாக, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான். 2004-ம் ஆண்டு அவர் மறைந்த பின்னர் அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது மூத்த மகன் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். 1948-ம் ஆண்டு பிறந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரக நாட்டின் 2-வது ஜனாதிபதி. ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி எமிரேட்ஸின் 16-ம் ஆட்சியாளர். ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமீரகம் விஸ்வரூப வளர்ச்சியை நோக்கி கம்பீர நடை போட்டது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று காலமானார். அவருக்கு 2014இல் ஏற்பட்ட மாரடைப்பின் பிறகு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு பெரிதாக அரசியல் விஷயங்களை கவனித்து கொள்ளாமல் இருந்து வந்தார். அந்த நேரங்களில் 61 வயதாகும் அவரது சகோதரர் முகமது பின் சயத் அலுவலக பணிகளை பார்த்துக்கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இறந்ததால், அடுத்த அதிபராக அவரது சகோதரர் முகமது பின் சயத்-தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே போல அவரே அதிபராகி உள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பின் ஏழு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களைக் குழுவாகக் கொண்ட கவுன்சில், அபுதாபியின் ஆட்சியாளரான அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் இறந்த ஒரு நாளுக்குப் பிறகு, MbZ என அழைக்கப்படும் ஷேக் முகமது சயதை தேர்ந்தெடுத்தனர். புதிதாக தேர்வாகியுள்ள அதிபரை வாழ்த்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும் பிரதமருமான துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வளைகுடா நாடுகள் உடனான உறவை அமெரிக்கா முறித்து கொண்டுள்ள இந்த நேரத்தில் இவர் அதிபராவது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.