NewZealand PM Corona : நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னுக்கு கொரோனா..! கணவன், மகளுக்கும் பாதிப்பு..!

நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் சில நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் உலகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement


அவரது கணவர் கிளார்க் கேபோர்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஜெசிண்டா ஆர்டெர்ன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  அவருக்கு நேற்று கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க : Mahinda Rajapaksa: ரகசிய இடத்தில் வைத்து ராஜபக்சே கைதா? - துரத்தும் நீதிமன்ற வழக்கு! இலங்கையில் பரபர நகர்வுகள்!

கொரோனா பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் வரும் 21-ந் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார். அவரது பணிகளை அவர் தனது வீட்டில் இருந்தே மேற்கொள்ள உள்ளார். அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் இதன் காரணமாக பங்கேற்கவில்லை.


ஜெசிண்டா ஆர்டெர்ன், அவரது கணவர் மட்டுமின்றி அவர்களது மகள் நேவேவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆர்டெர்ன் ஜெசிண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்பாராதவிதமாக நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்தபோது, நியூசிலாந்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதில் பிரதமர் ஜெசிண்டாவின் நடவடிக்கை உலகின் பிற நாட்டு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

மேலும் படிக்க : இலங்கையில் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நால்வர்: பின்னணி என்ன...?

மேலும் படிக்க : சிங்கள ஹீரோ... அதே மக்களால் ஜீரோ ஆன கதை... அறியாத அறியப்படாத பக்சவின் பாதை இது!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement