தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' -அமித் ஷா திட்டவட்டம்
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி' என அமித் ஷா திட்டவட்டம்!'கூட்டணி ஆட்சி' என அமித் ஷா கூறவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, 'ஆம்' என அமித் ஷா பதில்.
”சர்ச்சை கேள்விகளுக்கு தடை”
“TNPSC தேர்வுகளில் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக்கூடாது என வினாத்தாள் தயார் செய்யக்கூடிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்!” என TNPSC தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் பேட்டி. இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி.
ராமதாஸ் காவல்துறையிடம் புகார்
தன் சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தர கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் புகார் மனு. X மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளின் Password-கள் மாற்றப்பட்டுள்ளன, அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம்
கடலூர் ரயில் விபத்து: ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்துள்ளார் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா. விபத்துக்குப் பின், ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, கேட்டை மூடவில்லை' என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.
18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை: வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.குழந்தைகள் காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேர் கைது. காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு. குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரில் வண்டலூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை
பால விபத்திற்கான காரணம் என்ன?
குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் ‘பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது!இதன் எதிரொலியாக மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கார் பயணர்கள் ஷாக்
கேரளா: பாலக்காட்டில் காரை ஸ்டார்ட் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 3 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. 2 வாரங்களாகக் காரை இயக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை.
ஜப்பானில் அதிவேக இணையவசதி
1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகத்தை கண்டுபிடித்து ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் ஆகும். இது இந்தியாவின் சராசரி இணைய வேகமான 63.55 எம்பிபிஎஸ் ஐ விட 16 மில்லியன் மடங்கும் வேகமானது. இந்த இணைய வேகம் மூலம், நெட்பிளிக்ஸ் தளத்தி தளத்தில் உள்ள அனைத்து படங்களையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்து விட முடியும்.
ஒப்புக்கொண்ட அமெரிக்கா
ஈரானின் ஏவுகணைகள் கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் விமானப்படைத்தளம் பாதிக்கப்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இறுதிப்போட்டியில் அல்காரஸ் - சின்னர்
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் மற்றும் சின்னர் மோத உள்ளனர். முன்னதாக அரையிறுதிப்போடிட்யில் ஜோகோவிச்சை வீழ்த்தி சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதிப்போட்டியில் டெய்லர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.