சூரியனைச் சுற்றி விசித்திரமான சில சம்பவங்கள் அண்மையில் நடந்து வருகின்றன. சூரியனில் இருந்து வெளியேறும் ஒரு சில அலைகள் இருக்க வேண்டியதை விட வேகமாக பயணிக்கின்றன.
சூரியனின் பிளாஸ்மா வழியாக பின்னோக்கி பயணிக்கும் ஒரு வித்தியாசமான அலையை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அபுதாபியில் உள்ள கிரிஸ் ஹான்சன் மற்றும் அவரது குழுவினர் கடந்த சில தசாப்தங்களாக தரை மற்றும் விண்வெளி அடிப்படையிலான தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் ""high-frequency retrograde vorticity waves" எனப்படும் ஒருவகை அலைகளைக் கண்டறிந்தனர். இந்த சூரிய அலைகள் என்ன? இந்த அலைகள் பல சிறிய சுழல்களைக் கொண்டுள்ளன, அவை சூரியனைச் சுற்றி அதன் சுழற்சிக்கு எதிர் திசையில் பயணிக்கின்றன, என இந்தப் புதிய அலைகளைப் பற்றி கிரிஸ் ஹான்சன் விளக்கினார்.
விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த சுழல்கள் மற்ற அலைகளை விட மூன்று மடங்கு வேகமாக சூரியனைச் சுற்றி வருகின்றன. பிளாஸ்மா இயக்கத்தின் தற்போதைய மாதிரிகள் எதுவும் இந்த நிகழ்வை விளக்க முடியாது. இந்த ஒழுங்கற்ற அலைகளுக்கு விஞ்ஞானிகள் மூன்று சாத்தியமான விளக்கங்களைக் கூறுகின்றனர்: அவை சூரியனின் காந்தப்புலத்தால் ஏற்பட்டவை; அவை சூரியனில் உள்ள ஈர்ப்பு அலைகளிலிருந்து வெளிவருகின்றன; அல்லது பிளாஸ்மாவின் சுருக்கம் இந்த எதிர் அலைகளை உருவாக்குகிறது எனக் கணிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்தக் காரணங்கள் எதுவும் தரவுகளுடன் ஒன்றுபடவில்லை.
இதன்மூலம் தெரியவருவது என்ன? ஹான்சனின் கூற்றுப்படி, இது "சூரியனைப் பற்றிய நமது புரிதலில் ஒரு மூலப்பொருளைக் காணவில்லை" என்பதைக் குறிக்கிறது. புதிய அலைகளின் கண்டுபிடிப்பு சூரியனைப் பற்றிய புதிரை மேலும் கூட்டியுள்ளது. ஏனெனில் அவை என்ன என்பதை விளக்குவது இப்போது சவாலாக உள்ளது" என்று ஹான்சன் கூறியுள்ளார்.
காந்தம், ஈர்ப்பு மற்றும் சுருக்கம் ஆகியவற்றின் கலவையானது இந்த அலைகளை உருவாக்குகிறது என்று ஹான்சன் நம்புகிறார். பூமியின் கடலில் உள்ள ராஸ்பி அலைகள் எனப்படும் இதேபோன்ற அலைகளுடன் HFR களை ஒப்பிடுவதன் மூலம், விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் இந்த அலைகள் குறித்த ஒரு புதிய தகவலைக் கண்டுபிடிக்க முடியும்.
நாஸா கூட அண்மையில் சூரிய குடும்பம் பற்றிய அரிய வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது.