சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். சவூதி அரேபியாவிற்கும், ஹவுதி அமைப்பிற்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பூதாகரமாக வெடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தம்மம் நகரில் விமான நிலையம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஷைபா எண்ணெய் வயல் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. 

Continues below advertisement

 

இந்தியர் பலியான சோகம்

விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் காயமடைந்தனர். இதேபோன்று எண்ணெய் வயல் மீதான தாக்குதலில் இந்தியர் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் ஒட்டுமொத்த சவூதி அரேபியாவையும் உருக்குலைய செய்துள்ளது. இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Continues below advertisement

இந்தியா கடும் கண்டனம்

சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், அதில் இந்தியர் கொல்லப்பட்டதற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களின்  மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், இது போன்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.