உக்ரைனில் உள்ள பெண்கள் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு  தாங்கள் கவர்ச்சியாக காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக தங்களின் முடியை வெட்டிக்கொள்கிறார்கள்.


ரஷ்ய வீரர்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் முயற்சியில் உக்ரேனியப் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டிக் கொண்டுள்ளனர் என்று இவான்கிவ் துணை மேயர் மெரினா பெஸ்காஸ்ட்னா தெரிவித்துள்ளார். ஒரு கிராமத்தில், இரண்டு சகோதரிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பெண்கள்  துஷ்பிரயோகம் செய்வதற்காக அவர்களின் தலைமுடியால் இழுக்கப்பட்டனர். பெண்கள் கவர்ச்சியாக இருக்க தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்ட ஆரம்பித்தார்கள். அதனால் யாரும் அவர்களைப் பார்க்க மாட்டார்கள்” என்று கூறினார்.





உக்ரேனிய குடிமக்களுக்கு எதிரான சொல்ல முடியாத, திட்டமிட்ட கொடுமை மற்றும் வன்முறைக்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக அறக்கட்டளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது.மேலும் இவை போர்க்குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.


மலா ரோஹனில் உள்ள செர்ஜி என்ற 55 வயதான கிராமவாசி ஒருவர், 27 வயதுடைய பெண் ஐந்து வயது மகளுடன்  இளம்  ரஷ்ய  ராணுவ வீரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறினார். இதைச் செய்த அந்த ராணுவ வீரருக்கு 19 வயதிருக்கும் என்றும், ஏழைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன், நாள் முழுவதும் குடித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.




முன்னதாக, போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்கும் உட்பட்ட உக்ரைன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளதாக எம்பி லெசியா குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் கொள்ளைமட்டுமே அடிப்பதில்லை. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.


அவர்களின் உடலில் ஸ்வஸ்திக் முத்திரை நெருப்பால் பதிவியப்பட்டுள்ளது. ரஷ்ய தாய்களால் வளர்க்கப்பட்ட ரஷ்ய ஆண்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளன்ர். ஒழுக்கமே இல்லாத குற்றவாளிகள் நிரம்பிய தேசம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும்  ஸ்வஸ்திக் முத்திரை பதியப்பட்ட உடலின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர், மனம் முழுவதும் வெறுப்பும், கோபமும் உள்ளது. பேச்சற்ற நிலையில் உள்ளேன் என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண