ரஷ்ய போர்:
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்டன. கிவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டனர்.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகரனா கீவிற்கு அருகில் 410 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெளிவாகி அதிர்ச்சி கொடுத்தது. ராய்டர்ஸ் செய்தி தளம் வெளியிட்ட தகவலின்படி, தாக்குதலில் பலியான மக்களின் உடல் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும் அதை பார்த்த மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறந்துகிடப்பவர்களின் உடல்களை பார்த்தவர்களால், அதிர்ச்சியில் பேச முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சிக்கரமான தகவலை தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் உக்ரைன் எம்.பி.லெசியா வேசிலென்க்.
பாலியல் வன்கொடுமை..
போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்கும் உட்பட்ட உக்ரைன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளதாக எம்பி லெசியா குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்கள் கொள்ளைமட்டுமே அடிப்பதில்லை. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடலில் ஸ்வஸ்திக் முத்திரை நெருப்பால் பதிவியப்பட்டுள்ளது. ரஷ்ய தாய்களால் வளர்க்கப்பட்ட ரஷ்ய ஆண்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளன்ர். ஒழுக்கமே இல்லாத குற்றவாளிகள் நிரம்பிய தேசம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஸ்வஸ்திக் முத்திரை பதியப்பட்ட உடலின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர், மனம் முழுவதும் வெறுப்பும், கோபமும் உள்ளது. பேச்சற்ற நிலையில் உள்ளேன் என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக,புச்சா நகர் முழுக்க தாக்குதலில் இறந்த உடல்களால் நிரம்பியிருக்கும் காட்சிகளை உக்ரைன் ராணுவம் பகிர்ந்தது. ரஷ்யா தாக்குதல் நடத்திய பகுதிகளை கைப்பற்றியுள்ள உக்ரைன் ராணுவம் அப்பகுதிகளில் ராணுவ வீரர்களை விட, மக்கள் அதிகமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தெரிவித்தது. புச்சா நகரில் கிடக்கும் மனித உடல்களில், ஒருவர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டுள்ளார். பலரது கைகளில் தங்களது கைகளில் ஷாப்பிங் சென்று வந்த பைகள் இருக்கின்றன. இதை பார்த்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்