ரஷ்ய பயணிகள் விமானம் புறப்பட்ட பிறகு நடுவானில் காணாமல் போன நிலையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானம், சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் உள்ள டின்டா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், புறப்பட்ட சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது தொடர்பை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் An-24 பயணிகள் விமானம் வியாழக்கிழமை காணாமல் போனது, தேடுதல் பணி நடைபெற்று வருகிறது, ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. ரஷ்ய விமான நிறுவனமான அங்காராவின் இந்த பயணிகள் விமானம் திடீரென ரேடாரில் இருந்து மறைந்துவிட்டதாகவும், இன்னும் அதை மீண்டும் இணைக்க முடியவில்லை என்றும் உள்ளூர் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட 43 பயணிகள் இருந்தனர்.
நடந்தது என்ன?
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா - அன் -24 என்ற விமான நிறுவனம், சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகள் செயலிழந்ததால் காணாமல் போனதாக பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் தெரிவித்தார்.