ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்பட்சத்தில் அணு ஆயதத்தைப் பயன்படுத்துவோம் என்று க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் 28 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் அழிந்துள்ளன. ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கருத்துக்களும் பரவிவரும் நிலையில், தேவைப்பட்டால் ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று டிமிட்ரி பெஸ்கோவ் கூறியிருப்பது பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்துள்ளார். ரஷ்யா அணு ஆய்தத்தைப் பயன்படுத்துமா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, "உள்நாட்டுப் பாதுகாப்பு என்பதற்கான கொள்கை குறிப்பு உள்ளது. அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம். அதுவும் எங்கள் கொள்கையின்படியே நடக்கும்" என்றார்.
மேலும், ரஷ்யா, உக்ரைனின் இராணுவ ஆய்தங்களையும், இராணுவ பலத்தையும் மட்டுமே கைப்பற்ற நினைக்கிறோம். நாங்கள் இதுவரை உக்ரைனின் இராணுவ பகுதிகளில் மட்டுமெ தாக்குதல் நடத்தியுள்ளோம். இன்னும் உன்ரைனின் இராணுவ கிடங்கை முற்றிலுமாக அழிக்கவில்லை. உக்ரைனின் ராணுவ பலத்தை அழிப்பதே எங்கள் நோக்கம். உக்ரைன் ஒரு neutral country ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை. இருத்தலுக்கே அச்சுறுத்தல் என்றால் மட்டுமே அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (President Vladimir Putin), ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிந்தால், அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம். நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகள் மீது உடனடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும். வரலாறு காணாத அளவில் அதன் விளைவு இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஸ்கோவ்-ன் கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாடு பொறுப்புணர்ந்து பேச வேண்டும். இது அப்படியான பதில் இல்லை. ரஷ்யாவின் நகர்வை அன்றாடம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
கல்லூரிகளில் திருநருக்கு இலவச இடம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு