வெளியேற முடிவு:


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக தெரிவித்துள்ளது, உலக நாடுகளிடையே, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச விஞ்ஞானிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






சர்வதேச விண்வெளி நிலையம்:


சர்வதேச விண்வெளி நிலையமானது, 1998 ஆம் ஆண்டில், சுமார் 360 கி.மீ உயரத்தில் நிறுவப்பட்டது. இது 92 நிமிடத்துக்குள் பூமியை முழுமையாக சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விண்வெளி நிலையமானது, விண்வெளி ஆய்வுக்காகவும் மற்றும் நிலவு, செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி, விண்கலனை எளிதாக செலுத்தவும் பயன்படுகிறது.  இத்திட்டமானது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் கனடா ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.




ரஷ்யா – அமெரிக்கா மோதல்


உக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பகை நீடித்து வருகிறது. இரு நாடுகளும், ஒவ்வொருவர் மீதும் வர்த்தக தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலைய கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு முழுமையாக, ரஷ்யா வெளியேறப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புது விண்வெளி மையத்தை, ரஷ்யா அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண