உடலுறவின்போது உங்கள் பார்ட்னரின் வெளிப்படையான அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது  செக்ஸ் குற்றமாக வகைப்படுத்தப்படும் என்று கனடா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ம் ஆண்டு ஆன்லைனில் சந்தித்த இருவர் நேரில் சந்தித்து தாங்கள் பாலியல் ரீதியாக ஒத்துப்போகிறார்களா என்று சரிபார்க்க முடிவு செய்த வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


உடலுறவின்போது ஆணுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்று பெண் ஆரம்பத்தில் வலியுறுத்தினார், இருப்பினும், ஆண் ஆணுறை அணியவில்லை, அது பெண்ணுக்குத் தெரியாது, பின்னர் அவர் பயன்படுத்தவில்லை எனத் தெரிந்ததும் எச்ஐவி தடுப்பு சிகிச்சையை எடுத்துக் கொண்டார். குற்றம்சாட்டப்பட்ட ராஸ் மெக்கென்சி கிர்க்பாட்ரிக் தொடக்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பின்னர் அவர் ஆணுறை பயன்படுத்தத் தவறிய போதிலும் அது வெறும் உடலுறவு மட்டுமே  என்கிற அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.






இதை அடுத்த உச்சநீதிமன்ற விசாரணையில் "ஆணுறை இல்லாமல் உடலுறவு என்பது ஒரு ஆணுறையுடன் உடலுறவு கொள்வதை விட அடிப்படையில்  வித்தியாசமான செயலாகும்" என்று வெள்ளிக்கிழமை அன்று வெளியான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


"ஆணுறை பயன்பாடு பொருத்தமற்றதாகவோ, இரண்டாம்பட்சமாகவோ அல்லது தற்செயலானதாகவோ இருக்க முடியாது, ஆனால் புகார்தாரர் தனது சம்மதத்தை வெளிப்படையாகக் கூறாத வரையில் ஆணுறையை அகற்றுவது குற்றமே" என்று நீதிமன்றம் கூறியது. குற்றவியல் சட்டத்தின் இந்த புதிய விளக்கம், நாடு முழுமைக்கும் செல்லுபடியாகும், இது பாலியல் சம்மதத்தைச் சுற்றியுள்ள விதிகளை கடுமையாக மாற்றும் மற்றும் முன்கூட்டியே கையொப்பமிடப்பட வேண்டிய பைண்டிங் காண்ட்ராக்ட்டுக்கு ஈடானதாக இருக்கும் என்று பிரதிவாதியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
"கனடாவில், உடலுறவுக்கான சம்மதம் என்பது எப்போதும் அந்த தருணத்தில் எடுக்கப்படும் முடிவாகவே உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பின் விளைவாக சம்மதம் பெறுவது தொடர்பான பல்வேறு கூறுகளை உண்டாக்கியுள்ளது. இதன்படி ஒருவரிடம் உடலுறவு கொள்வதற்கான சம்மதம் பெறுவது சில நாட்கள் முன்னதாகவோ, அல்லது சந்திப்பின் தொடக்கத்திலேயே செயல்படுத்தப்படும்" என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் கூறிகையில், "அனைவருக்கும், குறிப்பாக ஆண்களுக்கு இதிலிருந்து தார்மீக ரீதியாக ஒரு செய்தி பகிரப்பட்டிருக்கிறது.உடலுறவின்போது எந்த ஒரு செய்கைக்கும்  சம்மதம் பெறவேண்டும் என்பதே அது” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஃபில் கோட் குறிப்பிட்டுள்ளார்.