இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் தரப்பில் முதலுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ்:
கடந்த 7 ஆம் தேதி ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையில் மோதல் தொடங்கியது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலை, ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் பதில் நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
முக்கியமாக காசாவில் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் காசா நகர மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுது.
மனிதாபிமானமற்ற செயல்:
ஏற்கனவே, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்து, பாதுகாப்பு தேடி வரும் மக்கள் மீது இம்மாதிரியாக தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்ற செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து பேசிய இஸ்ரேல் தூதர், "ஹமாஸ் படையை முற்றிலுமாக ஒழிக்க தரை வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இஸ்ரேலின் எதிர்காலத்திற்காக தாக்குதலை தொடர்வது அவசியம். ஹமாஸ் படையால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட 200 இஸ்ரேலியர்களை விடுவிக்க திட்டமிட்டு வருகிறோம்" என்றார். இது ஒருபுறம் இருக்க அங்கு பிணைக்கைதிகளாக இருக்கும் மக்களை விடுவிக்க பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல நாடுகளில் இருந்து முதலுதவி அனுப்பப்பட்டு வருகிறது. எகிப்தில் இருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்கும் வகையில் லாரிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் இருந்தும் மக்களுக்கு தேவையான முதலுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ் தளத்தில், “காஸாவில் உள்ள குடிமக்கள் தொடர்ந்து உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் பிற உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தூதர்கள் வெளியேற்றம்; இந்தியா எடுத்த நடவடிக்கை - கனடாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு
"காசாவின் கொடுங்கனவை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன்வர வேண்டும்" உதவி கேட்ட ஐநா