இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான நெருக்கடியில் உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருக்கிறார்.
இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கிய உதவியையும் இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக கூறியுள்ள இலங்கை அதிபர், அனைத்து பிரச்சினைகளும் வெகு விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
அதேவேளை எமக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு நாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார். இன்று எரிபொருள் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடு இதுவரை முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு இப்போது முகம் கொடுக்கிறது. இந்த நிலையை மாற்ற அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு எனக் கூறியுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தலும் நாம் அனைவரும் இலங்கையர்களே என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல தானும் எவ்வாறு அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும் இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையின் போது சர்வ கட்சி அரசு தொடர்பாக அனைவரையும் இணைந்து செயல்பட அழைப்பதாக கூறியுள்ளார்.
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சர்வ கட்சி அரசு மிக மிக அவசியம் என்பதை தான் மீண்டும் நினைவுபடுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. நிலைத்த ,நீடித்த பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நாம் மேற்கொள்ளவிவுள்ள நடவடிக்கைகள் குறித்து இனிவரும் நாட்களில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என இலங்கை அதிபர் கூறியுள்ளார்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இம்மாதம் முடிவதற்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் இலங்கையின் பழைய வரலாற்றின் படி மீண்டும் மேற்குலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாளராக ,நாம் நாட்டை மாற்றுவோம் என உறுதி கொண்டு உள்ளார் ரணில் விக்ரமசிங்க.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக வர்த்தகத் துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய் இருப்பதாக தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் இலங்கை அதிபர்.
இலங்கை ரூபாவின் பெருமதி மிகவும் வீழ்ழ்ச்சி அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு எதிர் பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.