தங்கம் தான் தாறுமாறு விலை என்பவர்கள் வைரத்தின் விலையை தெரிந்துகொண்டால் வாயடைத்து விடுவார்கள். குண்டூசி முனையளவு வைரம்கூட பல ஆயிரங்களை தாண்டும்.  வைரங்களில் பல வகைகள் உள்ளன. அதன் தரத்திற்கு ஏற்ப லட்சங்களையும், கோடிகளையும் கூட தாண்டும். அதன் விலை. நவரத்தினங்களும் ஒன்றான வைரம், படிக நிலையில் உள்ள ஒரு கரிமம் ஆகும். பட்டைத் தீட்டிய வைரம் ஒளியை  உள்வாங்கி சிதறச் செய்கிறது. இதனால் வைரங்கள் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. வைரம் மிகவும் உறுதியான பொருளாகும். பல தரங்களில், பல வண்ணங்களில் வைரங்கள் கிடைக்கின்றன




அப்படியான ஒரு காணக்கிடைக்காத வைரம் இப்போது சாதனை  படைத்துள்ளது. ஹாங்காங்கில் பர்பிள்-பிங்க் நிற வைரக்கல் 29.3 மில்லியன் டாலர்கள் ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 213 கோடி. 



15.8 கேரட் கொண்ட இந்த வைரத்தை "சகுரா" என்று அழைக்கின்றனர். சகுரா என்பது செர்ரி மலர்களுக்கான ஜப்பானிய வார்த்தை. வசந்த காலத்தின் தொடக்கத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு பூக்கும் சகுரா மலர்களை போலவே கண்ணைக்கவரும் வண்ணத்தில் இருப்பதால் இந்த வைரமும் சகுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய வகை, விலை உயர்ந்த வைரத்தை ஆசியாவைச் சேர்ந்த ஒரு நபர் ஏலம் எடுத்துள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.


கடந்த நவம்பர் மாதம் பர்புள் - பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் ரூ.198 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்தது.  The Spirit of the Rose என்று பெயரிடப்பட்ட அந்த வைரத்தின் எடை 14.83 காரட் ஆகும். வைரங்களில்  பர்பிள்-பிங்க் நிற வைரங்களுக்கு என்றுமே மவுசு அதிகம். இது குறித்து தெரிவிக்கும் ஏல நிறுவனம், பர்பிள்-பிங்க் நிற வைரங்கள் அரிய வகை. அந்த வகை வைரங்கலுக்கு சந்தையில் எப்போதும் தேவை இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. அதற்கு முன்பு 2017ஆம் ஆண்டு ஹாங்காங்கில் CTF Star Pink என்ற வைரமும் அதிக தொகைக்கு  ஏலம் போனது. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் விற்பனையான விலை உயர்ந்த வைரங்களில் பத்தில் ஐந்து வைரம் பர்பிள்-பிங்க் நிற வைரங்கள் தான். இந்நிலையில் 200 கோடியைத் தாண்டி சகுரா சாதனை படைத்துள்ளது




பிளாட்டினமும், தங்கமும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள மோதிரத்தில் இந்த சகுரா பதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த ஏல அமைப்பின் நிறுவனர், ஆபரண உலகில் மிக முக்கியமான ஒரு ஏலத்தை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். பெருமையாக இருக்கிறது. ஏலத்தில் சகுரா சாதனை படத்துள்ளது என்றார்.




நெடுஞ்சாலை எங்கும் நெருப்புக்குழம்பு.. காங்கோவை அதிரவைக்கும் எரிமலை சீற்றம்