இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண் சொட்டு மருந்துகளுடன் தொடர்புடைய பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும், நோய்த்தொற்று பரவுவது குறித்து கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது.  மார்ச் 21 அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட சுகாதார நிறுவனமான, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention - CDC) பல மாநிலங்களில் பரவிவரும் சூடோமோனாஸ் ஏருகினோசா என்ற ஒரு வகை நுண்ணுயிரியின் பரவலை ஆய்வு செய்வதாக அறிவித்தது. மேலும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என தெரிவித்துள்ளது.  


இந்தியாவில் தயார் செய்யப்படும் கண் சொட்டு மருந்துகளில் இருக்கும் அழியாத நுண்ணுயிர் அமெரிக்காவில் பரவும் அபாயம் இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. தொற்று நோய் நிபுணர்கள் இந்த திரிபு இதற்குமுன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதில்லை என்றும் ஏற்கனவே இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சேர்த்து இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என கூறியுள்ளனர்.


சென்னைக்கு தெற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர், பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க சந்தைக்கான ஐட்ராப்ஸ் தயாரிப்பை நிறுத்தியது.  EzriCare செயற்கைக் கண்ணீர் (artificial tears) மற்றும் Delsam Pharma இன் செயற்கைக் கண்ணீரைத் அந்த நிறுவனம் தானாக முன்வந்து திரும்பப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தின் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகள் ஆராயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, அசுத்தமான செயற்கைக் கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும் எனவும் மோசமான நிலையில் கண் பார்வை இழக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சூடோமோனாஸ் ஏருகினோசா என்பது ஒருவகையான பாக்டீரியா ஆகும், இது இரத்தம், நுரையீரல் அல்லது காயங்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும், மேலும் இந்த பாக்டீரியா ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


"EzriCare அல்லது Delsam Pharma இன் செயற்கைக் கண்ணீரைப் பயன்படுத்தியவர்களுக்கு கண்களில் நோய்த்தொற்று அல்லது  நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மார்ச் 21 அன்று தனது இணையதளத்தில் அறிவித்தது.   


(Inputs From PTI)


Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி விசாரணை குழுவில் இடம்.. அறிவித்த கலாஷேத்ரா அறக்கட்டளை..!


Most 200+ score in IPL: ஐபிஎல்-லில் அதிக முறை 200 ரன்கள்.. அடுத்தடுத்து சாதனையை குவிக்கும் சிஎஸ்கே.. முழு பட்டியல் விவரம்!