இலங்கை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் போடப்பட்டுள்ள காவல்துறை தடுப்பை உடைத்தெறிந்த மக்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது.


 






முன்னதாக, உளவுத்துறையிலிருந்து தகவல்கள் கிடைத்ததையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து ராணுவ தலைமையகத்திற்கு நேற்றிரவு தப்பி சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. சனிக்கிழமை போராட்டத்தை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய காவல்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்துள்ளனர்.


இதற்கு மத்தியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளர். இச்சூழலில், அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா மறுத்துள்ளது.


முன்னதாக, எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கம் ஆகியோரின் சட்டரீதியான சவாலை அடுத்து காவல்துறை ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து, இன்று காலை இலங்கை நாட்டின் கொடிகள் மற்றும் தலைக்கவசங்களை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையை சுற்றி வளைத்தனர்.


 






காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதிலும், போராட்டக்காரர்களின் கூட்டத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை. கொழும்புவுக்கு சென்று போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் ட்ரக் வண்டிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண