Philippines Earthquake: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

Continues below advertisement

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்:

பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.4  ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் தெற்கு தீவு முழுவதும் சாத்தியமான சேதம் குறித்து எச்சரித்துள்ளது. இதைதொடர்ந்து மேலும் சில நிலநடுக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ் முழுவதும் உள்ள கடலோர நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Continues below advertisement

இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்:

இதனிடையே, நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது மற்றும் மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள தப்பித்து ஓடியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

உள்ளூர் சுனாமி சூழ்நிலை தரவுகளின்படி, அலைகள் சாதாரண அலைகளை விட ஒரு மீட்டருக்கு மேல் உயரக்கூடும், மேலும் மூடப்பட்ட விரிகுடாக்கள் மற்றும் ஜலசந்திகள் இன்னும் அதிக அலைகளை சந்திக்கக்கூடும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சமர், தெற்கு லெய்ட், லெய்ட், தினகட் தீவுகள், சூரிகாவ் டெல் நோர்ட், சூரிகாவ் டெல் சுர் மற்றும் டாவோ ஓரியண்டல் ஆகிய ஏழு மாகாணங்களில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.