அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு தயார் செய்யப்பட்டுள்ள விருந்திற்கான மெனுவை ஜில் பைடன் தங்கள் செஃப் உடன் சேர்ந்து தயாரித்துள்ளனர்.


மோடி அமெரிக்கா பயணம்


அமெரிக்காவிற்கு தனது முதல் அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வியாழன் அன்று ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வழங்கும் அரசு விருந்தில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக தயாராகியுள்ள மெனுவை, அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடன், விருந்தினர் செஃப் நினா கர்டிஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் பிற சமையல்காரர்களுடன் சேர்ந்து தயார் செய்ததாக ANI தெரிவித்துள்ளது. ஊடக முன்னோட்டத்திற்காக வெள்ளை மாளிகையில் உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.



மெனுவில் உள்ளவை என்னென்ன?


மெனுவில் எலுமிச்சை-வெந்தயம் தயிர் சாஸ், மிருதுவான தினை கேக்குகள், கோடைகால ஸ்குவாஷ்கள், மரைனேட்டட் தினை மற்றும் வறுக்கப்பட்ட சோள கர்னல் சாலட், கம்பிரஸ்டு தர்பூசணி, கசப்பான அவகாடோ சாஸ், ஸ்டஃப் செய்யப்பட்ட போர்டோபெல்லோ காளான்கள், கிரீமி சாஃப்ரான்-சேர்த்து ரிசொட்டோ, ஏலக்காய் சேர்க்கப்பட்ட ஸ்ட்ராபெரி ஷார்ட்கேக் ஆகியவை அடங்கும் என அறிக்கை கூறியது.


தொடர்புடைய செய்திகள்: Vijay Kutty Story Round up: விஜய்யின் குட்டி ஸ்டோரீஸ் ஞாபகம் இருக்கா... இதோ குட்டி கதைகளின் ரவுண்டு அப்!


சர்வதேச தினை ஆண்டு ஸ்பெஷல் மெனு


"சர்வதேச தினை ஆண்டைக் கொண்டாடுவதற்கான முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் மரினேட்டட் தினைகளை எங்கள் மெனுவில் இணைத்துள்ளோம்" என்று நினா கர்டிஸ் கூறினார். கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் ஜோசுவா பெல்லின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஸ்டேட் டின்னர் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இசை நிகழ்ச்சியுடன் துவக்கம்


"நிகழ்வை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய அகப்பல்லா இசை குழுவான பென் மசாலா தொடங்குகின்றனர். அவர்கள் இந்தியாவின் ஒலிகளில் இருந்து உருவாக்க பாடல்களுடன் தொடங்குகின்றனர். அதன் மூலம் இந்தியாவின் ஒரு சிறிய பகுதியை வெள்ளை மாளிகைக்கு கொண்டு வருகிறார்கள்" என்று ஜில் பிடன் கூறினார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற மாபெரும் சாதனை யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பிரதமர் மோடி புதன்கிழமை வாஷிங்டன் சென்றடைந்தார். ஸ்டேட் டின்னர் தவிர, வாஷிங்டனில் தொழில்துறை தலைவர்களுடனான தொடர் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.