அமெரிக்காவில், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறினால் போக்குவரத்து நிறைந்த சாலையில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானியின் இந்த சாகச செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அவ்வப்போது, நடுவானில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறினால் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. இதனால் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உட்பட, உயர்பதவிகளில் இருந்த பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில், நடுவானில் திடீரென விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறினை மிகவும் சாதூர்யமாக கையாண்டு, விமானத்தினை பத்திரமாக சேதாரமில்லாமல் தரையிறக்கும் விமானிகளின் சாகச செயல்கள் குறித்த தகவல்களும் உலகம் முழுவதும் பகிரப்படுகிறது. அவ்வகையில் அமெரிக்காவின், வட காரோலினாவில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வின்சென்ட் ஃப்ரேசர் தனது மாமனாருடன் ஸ்வைன் கவுண்டியில் பறந்து கொண்டிருந்தபோது, அவரது விமானத்தின் இயந்திரம் செயலிழக்கத் தொடங்கியது. உடனே வின்சென்ட் விமானத்தின் சரிபார்ப்பு பட்டியலை பார்த்து, விமானத்தினை மீண்டும் இயக்க முயற்சி செய்தார். ஆனால் என்ஜினில் ஏற்பட்ட கோளாறினால், விமானம் அடுத்த 5 நிமிடத்தில் மீண்டும் கோளாறுக்கு ஆளானது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த போது, விமானம் தரையினை நோக்கி, மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனடியாக விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்க பாதுகாப்பான இடத்தினை தேடிக் கொண்டு இருக்கையில், ஒரு சாலையினை பார்த்ததால், அங்கு எப்படியாவது, விபத்து நேராமல், விமானத்தினை தரையிறக்க போரடி, விமானத்தினை போக்குவரத்து நிறைந்த சாலையில், மின்சார கம்பிகளைக் கடந்து, பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார். பரபரப்பான சாலையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்