Pink Moon 2025: நாளைய தினம் பிங் மூன் என்ற நிகழ்வு நிகழ உள்ளதாக வானியல் செய்திகள் தெரிவிக்கின்றன. பிங் மூன் என்றால், நிலவு உண்மையில் இளஞ்சிவப்பு நிறமாக தெரியும் என்று எடுத்துக் கொள்ள கூடாது. பிங்க் மூன் என்ற சொல்லானது, பாரம்பரியமாக அமெரிக்காவில் பயன்படுத்தபட்ட சொல்லாடல் என கூறப்படுகிறது. அதாவது காலத்தை மற்றும் காலநிலையை பெயரிடும் முறையில், இவ்வாறு அழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் முழு நிலவு (Full Moon)-க்கு கொடுக்கப்பட்ட ஒரு பாரம்பரிய பெயர் தான் பிங் மூன் என கூறப்படுகிறது


Also Read: உலகளவில் வெறுக்கப்படும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம்: இந்தியா எந்த இடம்?


பவுர்ணமி ( FULL MOON ):


பிங் மூன் என்பது குறித்து சற்று விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன்பு, பவுர்ணமி என்பது குறித்து தெரிந்து கொள்வது முக்கியம் என்று சொல்லலாம். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. இவ்வாறு, நிலவானது பூமியை சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படி சுற்றி வருகையில், சூரியனின் ஒளியானது, நிலா மீது படும் , ஒரு பக்கம் முழுவதும் படும் ஒளி , பூமியின் மீது படும். இதன் மூலம், நமக்கு பிரகாசமான நிலாவை நாம் காண முடிகிறது. இதைத்தான் பவுர்ணமி என அழைக்கிறோம்.




இந்த நிகழ்வானது தோராயமாக 29 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். சரி, பிங் என்பது குறித்து சற்று பார்ப்போம்.


பிங் மூன் பெயர் எப்படி வந்தது?


வட அமெரிக்காவின் ஆரம்பகால வசந்த கால மலர்களில் ஒன்றான மோஸ் பிங்க் என்று அழைக்கப்படும்  பூவானது பூத்து, அழகாக காட்சியளிக்கும். இந்த தருணத்தில்  உருவாகும் முழு நிலவை ( பௌர்ணமி ) இளஞ்சிவப்பு நிலவு  ( பிங் மூன் ) என்று அழைக்கப்படுகிறது.




 


இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த முழு நிலவானது, பூமியில் இருந்து  வழக்கத்தை விட சற்று தூரமான தொலைவுக்கு செல்லும் என்று தகவல் தெரிவிக்கின்றன. ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவு இது என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவில் உள்ள அபோஜி என்ற தொலைவு பகுதியை அடைவதால் சிறியதாக தெரியும் என கூறப்படுகிறது.


அதனால் வழக்கமான பௌர்ணமியைவிட, இந்த பௌர்ணமி சற்று சிறியதாக தெரியும். ஆனால், வெறும் கண்ணால் கண்டறியக் கூடிய வகையில் அவ்வளவு சிறியதாக காட்சி அளிக்காது.




பிங் மூன், இந்தியாவில் எப்போது ஏற்படும்?


அமெரிக்காவை  பொறுத்தவரை, இது சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2025 அன்று இரவு 8:22 EDT மணிக்கு நிகழும். மேலும், இந்த பிங்க் மூன் இந்தியாவிலும் தெரியும். அதாவது ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 13, 2025 காலை 5:00 மணிக்கு இந்திய நேரப்படி நிகழும். இந்தியா முழுவதிலுமிருந்து சந்திரனைக் காணலாம். மேலும் சிறந்த பார்வைக்கு திறந்தவெளிகள், மலை உச்சி போன்ற ஒளி மாசுபாட்டிலிருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு சென்று பார்க்கும் சிறப்பான அனுபவத்தை உணரலாம் என வானியல் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றன. 


Also Read: அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு