ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சியில் நெறியாளராக இருந்த ஒருவர் தற்போது சாலையில் உணவுப் பொருள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


அவர் சாலையில் உணவுப் பண்டம் விற்கும் புகைப்படத்தை முந்தைய ஆட்சியில் அரசுப் பணியில் இருந்த கபீர் ஹக்மால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், மூசா முகமது ஆப்கானிஸ்தானின் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தியாளராக, நெறியாளராக பணியாற்றியவர். தற்போது அவருக்கு வருமானம் இல்லை. ஆனால் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு உள்ளது. அதனால், தெருக்களில் ஏதேனும் உணவுப் பண்டங்களை விற்று பிழைப்பு நடத்துகிறார். குடியரசு ஆட்சி வீழ்ந்த பிறகு ஆப்கன் மக்கள் சொல்லில் அடங்கா வறுமையில் சிக்கியுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். 






ஆட்சி மாற்றமும் அவல நிலையும்:


தாலிபன்கள் கடந்த ஆண்டு 2021, ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதனால் உலக நாடுகளிடமிருந்து நிதி உதவிகள், வர்தக உறவு, முதலீடுகள் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதையெடுத்து, நாட்டின்  பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையிழப்பு, உணவுப் பஞ்சம் உள்ளிட்ட பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வறுமையிலிருந்து மீள்வதற்கு மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களையெல்லாம் விற்பனை செய்துச் சாப்பிட்டு வந்தனர். பலர் குழந்தைகளை விற்பனை செய்யும் பரிதாபமும் நிகழ்ந்தேறியது. இந்நிலையில் தங்கள் குடும்பத்திற்கு உணவு வேண்டும் என்பதற்காக சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கும் நிலைமை மோசமாகியுள்ளது.


ஆப்கானிதானை தாலிபன்களை கைப்பற்றியதிலிருந்து அங்கிருக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மேலும், உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானிற்கு வழங்கி வந்த அனைத்துவிதமான உதவிகளையும் நிறுத்தியது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வேலைகளை இழந்தனர். உணவுத்தட்டுபாடு அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். மக்கள் தங்கள் குழந்தைகளை விற்றும், தங்களின் உடல் உறுப்புகளை விற்றும் பசியைத் தீர்க்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


ஆப்கனின் கெடுபிடிகள்:


45 மைல்களுக்கு அதிகமாகப் பயணம் செய்யும் பெண்கள், நெருங்கிய ஆண் துணையின்றி தனியே வந்திருந்தால் அவர்களுக்கு வாகனங்களில் இடம் கொடுப்பது தடை செய்யப்படுகிறது என்று ஆப்கன் அரசு கெடுபிடி விதித்துள்ளது.


கூட வரவேண்டியது நெருங்கிய ஆண் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். ஆப்கன் அரசு பெண் கலைஞர்கள் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தது. பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கும்போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.


அதே போல பயணம் செய்யும் பெண்களும் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்றும் வாகனங்களில் இசை எதுவும் ஒலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம், தாலிபான் அமைப்பினர் பள்ளிகளை மூடியதால் ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டில் இருக்க வைத்திருப்பதாக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பெண் பள்ளிகளை 7ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மூடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆட்சிக்கு வந்த போது, தாலிபான் தலைவர்கள் நாட்டில் பெண்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழல் உருவாக்கி வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படம் ஆப்கானிஸ்தான் அவலத்திற்கு மற்றொரு சாட்சியாக இருக்கிறது.