இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸின் மனாய் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தோனேசியாவிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 


உலகளவில் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் முக்கிய சர்வதேச நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் ஜெர்மன் ரிசர்ச் சென்டர் ஃபார் ஜியோசயின்சஸ் (ஜிஎஃப்இசட்) மூலம் பிலிப்பைன்ஸின் டாவோ ஓரியண்டல், டாவோவில் உள்ள மனாய் அருகே 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அரை மணிநேரத்திற்கு முன்பு தெரிவித்துள்ளது. 


இன்று (ஏப்ரல் 19, 2022) செவ்வாய்க்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணிக்கு நிலநடுக்கமானது கடலுக்கு மையப்பகுதிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC), அதே நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண